ரிவால்வர் ரீட்டா டார்க் காமெடி படம் – கீர்த்திசுரேஷ் வெளிப்படை
சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் ரிவால்வர் ரீட்டா.
இதில், கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.ராதிகா சரத்குமார்,சூப்பர் சுப்பராயன், சுனில்,அஜய் கோஷ்,ரெடின் கிங்ஸ்லி,ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர்,சுரேஷ் சக்ரவர்த்தி,கதிரவன், செண்ட்ராயன்,அகஸ்டின், பிளேடு சங்கர், ராமச்சந்திரன் அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை,தி ரூட் நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் பேசன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் இணைந்து தயாரித்துள்ளனர்.இப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நவம்பர் 25 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில்நடிகர், ரேடியோ ஜாக்கி, பிளேடு சங்கர் பேசியதாவது..,
இது நமது படம்,என் நண்பன் படம்,கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி.இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள்தான்.கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்ததுதான் இந்தப்படம். தமிழ்படம்,ரோமியோ ஜூலியட் மாநாடு,கோட் என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது,அதைப்பற்றிச் சொல்லிக்கொள்ளவே மாட்டார்.அத்தனை தன்னடக்கம்.அவர் நிறைய யோசிப்பார்.நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார்,ஆனால் அவருக்கு தேவையானதைச் சரியாக எடுத்துக்கொள்வார்.இப்படத்தில் நான் கீர்த்தி சுரேஷின் அக்கா கணவராக நடித்துள்ளேன்.அவர் சாதாரணமாக இந்த ஸ்டேஜுக்கு வரவில்லை.ஒரு காட்சிக்கு இப்படி பண்ணலாமா?,அப்படி பண்ணலாமா?, என உழைத்துக்கொண்டே இருப்பார்.ராதிகா மேடமிடம் ஒரு காட்சியில் செம்மையாக அடி வாங்கியிருக்கிறேன். இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர்.குடும்பத்தோடு பார்த்து இரசிக்க வேண்டிய படம்.இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் அகஸ்டின் பேசியதாவது..,
மேடையில் இருப்பது இதுதான் முதல்முறை. ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. இந்தப்படம் செம்ம ஜாலியாக எடுத்தார்கள்,நானும் செண்ட்ராயன் அண்ணாவும் நடிக்கும்போது,டைரக்டர் பயங்கர டென்ஷனாக இருப்பார்.ஆனால் போகப்போக ஈஸியாகிவிட்டார்.கீர்த்தி மேடம் எல்லோரையும் சரிசமமாகப் பார்ப்பார்,அது எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து உழைத்து ஒரு நல்லபடத்தைத் தந்துள்ளோம்,அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
நடிகர் சஞ்சீவ் பேசியதாவது..,
எல்லோருக்கும் நன்றி.இந்தப்படத்தில் டேனி என ஒரு சுவாரஸ்யமான கதாப்பாத்திரம் செய்துள்ளேன்.கீர்த்தி சுரேஷ் ரொம்ப ஜாலியாக எங்களுடன் வேலை பார்த்தார். இப்படம் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் சுதன் சுந்தரம் இருவருக்கும் நல்ல வெற்றியைத் தரும்.அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் கதிரவன் பேசியதாவது..,
இந்தபடத்தின் ஒன்லைனை சந்துரு சார் சொன்ன போதே,இந்தக்கதை எப்படிச் செய்தாலும் வெற்றி பெறும் எனச் சொன்னேன்.அவருடன் நான் நிறைய வேலைபார்த்துள்ளேன்.இப்படத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் சுதன் சுந்தரம்,கீர்த்தி மேடம்,சந்துரு அனைவருக்கும் நன்றி.நான் என் திரைவாழ்க்கையில் நிறைய பேரைப் பார்த்துள்ளேன்,ஆனால் கீர்த்தி மேடம் நிறைய ஸ்பேஸ் தந்தார்.இந்தப்படம் ஒரு ரோலர்கோஸ்டர் ரைட் மாதிரி இருக்கும்.அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை அக்ஷிதா அஜித் பேசியதாவது..,
ரிவால்வர் ரீட்டா என் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்ஸ்டோன்.இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்கள் ஜகதீஷ் பழனிச்சாமி,சுதன் சுந்தரம், இயக்குநர் சந்துரு சார் அனைவருக்கும் நன்றி. கீர்த்தி மேடம் மிகவும் ஃபர்ண்ட்லியாக,இயல்பாக பழகினார். என்னுடன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது..,
ரிவால்வர் ரீட்டா ஒரு பிரம்மாண்டமான படம்,மிக அழகாகப் படத்தை இயக்குநர் எடுத்துள்ளார்.நவம்பர் 28 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.படத்தில் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்தார்கள்.கீர்த்தி மேடம் மிக இயல்பாக பழகினார். இந்தப்படத்தில் சூப்பராக கார் ஓட்டியுள்ளார்.அந்த காட்சிகள் சூப்பராக வந்துள்ளது.எனக்கு தா குமார் என ஒரு கதாப்பாத்திரம்,படம் சூப்பராக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு நல்லரோல் தந்த இயக்குநருக்கு நன்றி என்றார்.
இயக்குநர் ஜே.கே.சந்துரு பேசியதாவது..,
ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி.ஒரு ஹீரோயின் சப்ஜெக்டை நம்பி, பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள்.கீர்த்தி மேடமுக்கு நன்றி.கதையில் கீர்த்தி மேடம் அளவுக்கு ராதிகா மேடம் மற்றும் பல கேரக்டருக்கு சமமான ரோல் இருந்தது, ஆனால் அவர் எனக்குக் கதை பிடித்துள்ளது எனச் சொன்னார் அவருக்கு நன்றி.ஒளிப்பதிவாளர் தினேஷ் திரையில் மேஜிக் செய்துள்ளார்.ஷான் ரோல்டன் அவருடைய பெஸ்ட் தந்துள்ளார்.திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் நீண்டகால நண்பர் சூப்பராக செய்துள்ளார்.எடிட்டர் பிரவீன் சார் அவர்களின் எடிட்டிங் இந்தபடத்தில் பேசப்படும்.கீர்த்தி மேடம் படத்திற்காக அவ்வளவு பெரும் ஒத்துழைப்பு தந்தார்,அவருக்கு நன்றி. ராதிகா மேடம் அம்மாவாக நடித்துள்ளார்.அவருடைய ரோல் சூப்பராக இருக்கும்.சுனில் சார்,அஜய் கோஷ் சார் நல்ல ரோல் செய்துள்ளார்கள்.இப்படத்தில் நிறைய கேரக்டர்கள் எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர். இது ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயினர்.குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கலாம்.அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது..,
ரிவால்வர் ரீட்டா.இயக்குநர் சந்துரு வெங்கட் பிரபு சார் கூட நிறைய வேலை பார்த்துள்ளார்.அவர் முதல்நாள் கதை சொன்னபோதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன்.அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.அவர் ரீட்டாவாக என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி.ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி.அவர்கள்தான் இந்த புராஜக்டை டிசைன் செய்தார்கள்.ஒளிப்பதிவாளர் தினேஷ் உடன் முன்பே வேலை பார்த்துள்ளேன்,அவர் இப்படத்தை அழகாக ஷூட் செய்துள்ளார்.ஷான் நல்ல இசை தந்துள்ளார்,அவருடன் மீண்டும் வேலை பார்த்தது மகிழ்ச்சி.கலை இயக்குநர்,எடிட்டர் எல்லோருக்கும் நன்றி.ராதிகா மேடமுடன் முதல்முறையாக நடிக்கிறேன், அவர் தயாரிப்பில்தான் நான் தமிழில் அறிமுகமானேன் , அவருடன் நடித்த காட்சிகளை எல்லோரும் இரசிப்பீர்கள்.என் உடன் நடித்த மற்ற அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர்.கதிர் சார்,செண்ட்ராயன் சார், அகஸ்டின் சார் காட்சிகள் சூப்பராக இருக்கும். ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம்,எல்லோரும் கண்டிப்பாக இரசிப்பீர்கள் நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகிறது.அனைவரும் பார்த்து இரசியுங்கள் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.












