சினிமா செய்திகள்

ஜனநாயகன் வியாபாரம் – வாங்காமலே 9 கோடி சம்பாதித்த விநியோகஸ்தர்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது.

இந்தப்படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் சொன்ன விலை சுமார் 120 கோடி.விஜய்யின் முந்தைய படமான தி கோட் தமிழ்நாட்டில் சுமார் 103 கோடி தயாரிப்பாளரின் பங்காகக் கொடுத்தது என்பதால் ஜனநாயகன் விலை 120 கோடி என்பது நிறுவனத்தின் கணக்காக இருந்தது.

ஆனால், இந்த விலை அதிகம் என்று சொல்லி யாரும் வாங்க முன்வரவில்லை.

இதனால், விஜய்யுடன் இருக்கும் ஜெகதீஷ் என்பவர், ரோமியோ பிக்சர்ஸ் ராகுலை அழைத்துக் கொண்டுபோய், விஜய் இவருக்கு தமிழ்நாடு உரிமையைக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாடு உரிமை சுமார் 87 கோடி என்று விலைபேசி அதில், ஐம்பது கோடி முன் தொகை கொடுத்தால் ஒப்பந்தம் போட்டுவிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.பேச்சுவார்த்தை நடத்தி பல மாதங்கள் ஆகிவிட்டபோதும் ராகுலால் சொன்னபடி பணம் கொடுக்க முடியவில்லையாம்.அதனால் அவரை நீக்கிவிடும் முடிவை தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கிறது.

அதோடு, சென்னை 8 கோடி, செங்கல்பட்டு 25 கோடி விலை.இந்தப்பகுதிகளை மாலி என்பவருக்கும், வட ஆற்காடு தென்னாற்காடு பகுதிகள் சீனு என்பவருக்கு 14 கோடிக்கும்,திருச்சி,மதுரை,சேலம் ஆகிய மூன்று பகுதிகள் ஃபைவ் ஸ்டார் செந்தில் நாராயணசாமி ஆகியோருக்கு சுமார் 36.50 கோடிக்கும் கோவை பகுதி மன்னார் என்பவருக்கு சுமார் 16 கோடிக்கும் திருநெல்வேலி பிரதாப் என்பவருக்கு சுமார் 7 கோடிக்கும் கொடுத்திருக்கிறார்கள். மொத்தம் 106.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறதாம்.

இதில் வியக்கத்தக்க விசயம் ஒன்றும் நடந்திருக்கிறது.

இந்தப்படத்தை முதலில் வாங்க முன்வந்த ராகுல்,அதற்காக சுமார் 22 கோடி முன் தொகை கொடுத்திருந்தாராம்.அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு இதிலிருந்து அவர் விலகிக் கொள்ள அவருக்கு ஒரு தொகையை நட்ட ஈடாகக் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.

அதன்படி,அவருக்கு சுமார் ஒன்பது கோடி கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

எப்படி?

அவர் வாங்கிய விலை சுமார் 87 கோடி என்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து சுமார் 19 கோடி அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.இந்த விலையைக் கொடுக்க ராகுல் முன்வரவில்லையாம்.அதேநேரம் இதிலிருந்து விலக ஒப்புக்கொண்டதற்காக கிடைக்கும் அதிக தொகையில் பாதியை நட்டஈடாகக் கொடுக்க ஒப்புக்கொண்டதாம்.

இது அவர் கொடுத்த முன் தொகைக்கான வட்டிக் கணக்கை நேர் செய்யும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts