சினிமா செய்திகள்

பொன்ராம் படத்தை முற்றாக நிராகரித்த மணிரத்னம் – உண்மை என்ன?

இயக்குநர்கள் மணிரத்னம் ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது.

கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் கதை இந்த ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளது.

சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

இதன் ஒளிப்பதிவாளர்களாக சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியன், மனோஜ் பரஹம்சா, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான் ஆகியோர் இசையமைப்பாளர்களாக பணிபுரிகிறார்கள்.

இவற்றில் பொன்ராம் இயக்கத்தில் கெளதம்கார்த்திக் நடித்த படமும் இருந்தது.அப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நடத்தி முடித்து விட்டனர் .

பொன்ராம் மற்றும் கெளதம்கார்த்திக் இணைந்துள்ள அந்தப் படத்திற்க்கு டவுன் பஸ் என்று பெயர் வைத்துள்ளதாகச் சொல்லப்பட்டது.

இது உட்பட எல்லாப்படங்களும் தயாரான பின் அவற்றை மணிரத்னம் பார்த்திருக்கிறார். அவற்றில் பொன்ராம் இயக்கிய படம் அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். அதனால் மொத்தமாக அதை நீக்கிவிட்டு வெறொரு படத்தை எடுக்கச் சொல்லிவிட்டாராம்.

இந்தத் தகவலால் மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறாராம் பொன்ராம்.

இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜெயேந்திராவிடம் கேட்டபோது, நாங்கள் எடுத்த படங்களை நெட்ப்ளிக்ஸுக்கு அனுப்புவோம், அவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்கிறார்.

Related Posts