குலுமணாலியில் ஹாரிஸ்ஜெயராஜ் – சூர்யா 37 படக்குழு வியப்பு
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்போதைக்கு சூர்யா 37 என்று அழைக்கப்படுகிறது.
இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜூன் 23 அன்று இலண்டனில் தொடங்கியது இப்படத்தின் படப்பிடிப்பு.
இப்போது குலுமணாலியில் நடந்துகொண்டிருக்கிறது. அங்கு திலீப்சுப்பராயன் சண்டைப் பயிற்சியில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படுகின்றனவாம்.
சண்டைக்காட்சிகள் படமாகும்போது இயக்குநருக்குப் பெரிதாக வேலை இருக்காது.
எனவே, இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜை குலுமணாலி வரச்சொல்லிவிட்டாராம் கே.வி.ஆனந்த். இன்னும் இரண்டு பாடல்களுக்கான மெட்டமைக்கும் பணியைச் செய்யவிருக்கிறார்களாம்.
இயக்குநரின் பொறுப்பு அவர் அழைத்ததும் புறப்பட்டுச் சென்ற ஹாரிஸின் பொறுப்பு ஆகியனவற்றைப் பற்றி வியந்து பேசுகிறது படக்குழு.











