கார்த்தி படக்குழு அதிரடி முடிவு – கைதி படம் தீபாவளி வெளியீடு
‘மாநகரம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவருடைய இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’. இந்தப் படத்தில் கதாநாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
நரேன், ரமணா, யோகிபாபு உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர்.
இப்படம் வெளிவருமுன்பே இப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதற்கடுத்து விஜய் படத்தி இயக்குகிறார் என்று செய்திகள் வெளியானதால் இப்படம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து வருவதாகச் சொல்லப்படும் இப்படத்தை இவ்வாண்டு தீபாவளி நாளில் திரைக்குக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்களாம்.
இவ்வாண்டு தீபாவளி அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அந்த நாளில் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
விஜய் நடிக்கும் பிகில் படமும் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அப்படம் இரண்டு நாட்கள் முன்பாக அக்டோபர் 25 வெள்ளிக்கிழமையே வெளியாகும் என்று சொல்ல்ப்படுகிறது.











