சினிமா செய்திகள் நடிகர்

பிறந்தநாளில் மதுவிருந்து – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தனுஷ்

தனுஷின் பிறந்தநாள் இன்று.

இதையொட்டி நேற்றிரவு தி பார்க் நட்சத்திரவிடுதியில் தனுஷ் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்.

நேற்று முழுக்க திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் மோசமாகி தமிழகம் முழுதும் பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையிலும் தனுஷ், தன் பிறந்த நாளையொட்டி மதுவிருந்து நடத்தியதாகவும், கலைஞர் சீரியஸ் என்று ஓரிருவர் எடுத்துச் சொல்லியும், அத விடுங்க நீங்க ஜாலியா என்ஜாய் பண்ணுங்க என்று தனுஷ் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கலைஞர் எதிர்ப்பையே முழுமூச்சாக க் கொண்ட அதிமுகவைச் சேர்ந்தவர்களே கலைஞர் உடல்நலம் குறித்து கவலை கொண்டு பேசுகிறார்கள்.

இந்நிலையில் எல்லாத் தரப்புக்கும் பொதுவான கலைஞன் என்ற நிலையில் இருக்கும் தனுஷ் இப்படிச் செய்திருப்பது அனைவரையும் அதிர வைத்திருக்கிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு அப்துல்கலாம் மறைந்த போதும் இதேபோல் விருந்து நடத்தி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts