செய்திக் குறிப்புகள்

கஜினிகாந்த் படப்பிடிப்பில் கஷ்டப்பட்டேன் – ஆர்யா ஒப்புதல்

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார் இப்போது எழுதி இயக்கியிருக்கும் படம் கஜினிகாந்த்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப்படம் பற்றி படத்தின் நாயகன் நடிகர் ஆர்யா கூறியதாவது…

இந்தப் படம் தெலுங்கு படத்தின் ரீமேக். இதற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் காரணம். படப்பிடிப்பிற்கான முன்தயாரிப்புகளை ஏழே நாட்களில் இயக்குநர் சந்தோஷ் முடித்துக் கொடுத்து படப்பிடிப்பிற்குச் சென்றார்.

இது அவரின் திறமை. இந்தப் படத்தின் வசனங்களும் இளந்தலைமுறையினைக் கவரும் வகையில் இருக்கும். அவரின் முதல் இரண்டு படங்களும் அடல்ட் படங்களாக இருந்தாலும் வசனங்கள் நன்றாகத்தான் இருந்தது.

பாங்காக்கில் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினோம். எனக்கு நடன அசைவுகள் எதுவும் வரவில்லை. ஆனால் உடன் நடிக்கும் நாயகி சயீஷாவிற்கு எளிதாக இருந்தது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடினேன். இந்தப் படத்தை 38 நாட்களில் இயக்குநர் திட்டமிட்டு நிறைவு செய்தார். இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம் என்கிறார் ஆர்யா.

Related Posts