சினிமா செய்திகள்

உறுதியானது விஜய் சசிகுமார் கூட்டணி

விஜய் இப்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுள்ள கொரொனா வைரஸ் சிக்கலால் பட வெளீயீடு தள்ளிப்போகும் என்ரு சொல்லப்படுகிறது.

விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத பேச்சு இருக்கிறது.

இந்நிலையில் அதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்து தகவல்கள் கசிகின்றன.

விஜய் 66 என்று சொல்லப்படும் அந்தப்படத்தை சசிகுமார் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சசிகுமாரை நடிக்கக் கேட்டு அணுகியவர்களிடம் இதை சசிகுமாரே சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு விஜய் படத்தை சசிகுமார் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அப்பேச்சு வெறும் பேச்சாகிவிட்டது.

இப்போதும் அப்படியே ஆகிவிடுமா? அல்லது நடைமுறைக்கு வருமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Related Posts