சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநர் இவர்தான்
சிவகார்த்திகேயன் இப்போது இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்விரண்டு படங்களில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அயலான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை புதுமுக இயக்குநர் அசோக் என்பவர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர் இயக்குநர் அட்லியிடம் பணியாற்றியவராம்.
அதிகாரப்பூர்வமற்ற இந்தச் செய்தி பரவிவருவதால், புது இயக்குநர்கள் படத்தில் நடிப்பதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் இப்போது ஒரு புது இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.












