சிகிச்சை எதுவுமில்லாத விநோத நோயால் பாதிக்கப்படுகிற கதாநாயகன் விஷ்வக்சென், அந்நோயைத் தீர்க்கும் அரியவகைக் காளான் இமயமலைப்பகுதியில் இருக்கிறதென்பதை அறிந்து அதைத் தேடிப்போகிறார்.அந்தக் காளான் பற்றி ஆய்வு செய்யும் மருத்துவர் சாந்தினி செளத்ரியும் அவருடன் இணைந்து பயணிக்கிறார். இந்த மையக்கதையோடு
விமர்சனம்
கார்டியன் என்றால் பாதுகாவலர். பெண்குழந்தைகளின் முதல் பாதுகாவலர் அவர்களின் அம்மாதான்.அவர்களுக்குள்ளான பிணைப்பு அளவிட முடியாதது.அதில் சிக்கல் ஏற்பட்டால் அதன் பாதிப்பும் அளவிட முடியாத அளவுதான் இருக்கும்.ஓர் அம்மா ம்கள் பாசம், அதில் ஏற்படும் கொடும் சிக்கல்,அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய உணர்வுப்பூர்வமான விசயங்களை பேய் மற்றும் திகில் சுவை கலந்து கொடுத்திருக்கும் படம் கார்டியன்.
நவீன வசதிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றினால் இளந்தலைமுறையின் சிறு பகுதியினர் என்னவெல்லாம் செய்கின்றனர்? என்பதை எடுத்துச் சொல்லும் படங்களின் வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறது நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. படத்தின் நாயகன் செந்தூர்பாண்டியனுக்கு முகநூலில் மேய்ந்து அங்கு சிக்கும் இளம்பெண்களோடு நேரம் செலவழிப்பது எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் செல்வது என
ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம்,ஒரு அம்மா, மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள்.இரண்டு பெண்களின் கணவர்களை இழந்து நிற்கிறார்கள்.அண்ணன், தம்பிகளுக்குள் திருமண விசயத்தில் தீராப்பகை. இவற்றோடு அந்த அம்மா வழக்கமான அம்மா இல்லை. வித்தியாசமான குணாம்சங்கள் கொண்டவர். அதனால் பல சிக்கல்கள். ஒருநாள் அந்த அம்மா காணாமல் போகிறார். அவர் கிடைத்தாரா? அந்தக் குடும்பம் என்னவானது?
சாதி மாறித் திருமணம் செய்தால் ஊரைவிட்டுப் போகவேண்டும் இல்லையெனில் உயிரை விட வேண்டும் என்கிற கொடிய கட்டுப்பாட்டை வைத்திருக்கும் கிராமமொன்றில் பிறந்த நாயகன் வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் அரிமாபட்டி சக்திவேல்.இதில் அரிமாபட்டி என்பது கதை நடக்கும் கிராமம்.சக்திவேல் கதாநாயகனின் பெயர். படத்தின்
ஒரு பல்கலைக்கழக வளாகத்தைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு பல உளவியல் சிக்கல்கள் குறித்துப் பேச விழைந்திருக்கும் படம் போர். அர்ஜுன் தாஸ் படிக்கும் வளாகத்தில் முதலாண்டு மருத்துவக்கல்லூரி மாணவராக வந்து சேருகிறார் காளிதாஸ் ஜெயராம்.இருவருக்கும் ஏற்கெனவே பகை.அது இங்கும் தொடருகிறது. இவர்களுக்குள்ளான போர் எதுவரை போகிறது? என்பதைச் சொல்வதுதான் படம். அர்ஜூன் தாஸ், வழக்கம்போலவே இறுக்கமான
காதலன் கூலிக்கொலைகாரன் என்று தெரிந்ததும் விலகிப் போகிறார் காதலி. அதனால் மனம்மாறிய காதலன், கூலிக்காவலனாக மாறுகிறார். ஒரு கட்டத்தில் காதலியையே காக்க வேண்டிய வேலை அவருக்கு வருகிறது.வெறும் வேலை மட்டுமின்றி காதலும் நிரம்பிவழிவதால் இமை போல் காக்கிறார். இதுதான் ஜோஷ்வா இமைபோல்காக்க படத்தின் கதை. நாயகனாக அறிமுகமாகியிருக்கும் வருணுக்கு முதல்படமே முழுமையான படமாக அமைந்திருக்கிறது.
நவீன தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் அதேவேளையில் மனிதநேய வீழ்ச்சிக்கும் காரணமாகிறது.குறிப்பாக மனிதர்களுக்குள்ளான அடிப்படை குணமான நம்பிக்கை பெரிதும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதற்குச் சான்றாக வந்திருக்கும் படம் அதோமுகம். நாயகன் எஸ்.பி.சித்தார்த், நாயகி சைதன்யாபிரதாப் ஆகிய இருவரும் காதல் மணம் புரிந்த இணையர். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தரும்
நாயகன் பிரஜினுக்கு, சந்தர்ப்பவசத்தால் காதலியைக் கரம்பிடிக்க முடியாமல் போகிறது.அவள் நினைவுடனே வாழ்ந்துவிட நினைத்தால் உறவுகள் விடுவதில்லை. கட்டாயமாகத் திருமண பந்தத்துக்குள் சிக்குகிறார். திருமணத்துக்குப் பின் முதல்காதலி வந்து நிற்கிறார்.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருப்பதுதான் நினைவெல்லாம் நீயடா. நாயகன் பிரஜின் காதலையும் காதல் ஏக்கத்தையும் நன்றாக வெளிப்படுத்தி
அசாதரணமாக நடக்கும் கொலைகள் அவை குறித்த காவல்துறை விசாரணை அதற்குத் துணையாக அமையும் நாயகன் வைபவ்வின் சிறப்புத்திறன் ஆகியனவற்றைக் கொண்டு படபடப்பாகப் பார்க்கும் வண்ணம் வெளியாகியிருக்கும் படம் ரணம் அறம் தவறேல். நகரின் பல பகுதிகளில் எரிந்த நிலையில் பல உடல்பாகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வைத்து அவர்கள் உருவத்தை வரையும் திறமை கொண்ட நாயகன் வைபவ்வை துணைக்கு வைத்துக் கொண்டு அவ்வழக்கை
























