அறிவியலின் அசுர வளர்ச்சி நம்பவியலாத நாகரிக வளர்ச்சி ஆகியன நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலும் சாதிய பாகுபாடு மற்றும் ஆணவக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலமும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.இச்சிக்கலை திரைமொழியில் பேசியிருக்கும் படம் எமகாதகி. படத்தின் நாயகி ரூபா கொடுவாயுர்
விமர்சனம்
ஈரம் படத்தில் தண்ணீரில் பேய் இருக்கிறதெனச் சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் அறிவழகன் ஒலியில் பேய் என்று சொல்லி பயமுறுத்த முனைந்திருக்கும் படம் சப்தம். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதனால், அந்தக் கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாகத் தகவல் பரவுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சம்
உலகம் உயிர்களுக்கானது மனிதர்க்கு மட்டுமன்று என்றொரு புகழ்பெற்ற சொல்லாடல் உண்டு.அதன் திரைவடிவமாக வந்திருக்கும் படம் கூரன்.கூரன் என்றால் தமிழ் அகராதியில் நாய் என்று அர்த்தமாம் மகிழுந்து ஒன்றினால் தனது குழந்தை (நம் பார்வையில் நாய்க்குட்டி) கொல்லப்பட்டுவிட அந்தக் கொலைக்கு நீதி கேட்டு ஒரு நாய் போராடுவதுதான் இந்தப்படம்.அது எப்படி முடியும்? என்கிற கேள்விக்கான விடைதான் திரைக்கதை.
பேய்ப்படங்களுக்குக் குறைந்தபட்சப் பாதுகாப்பு உண்டு என்பதால்,அதை மையமாகக் கொண்டு அதனுடன் பழங்காலம்,சித்தமருத்துவம்,அரிய மருந்து உள்ளிட்ட விசயங்களைக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் அகத்தியா. திரைப்படத்துறையில் கலை இயக்குநராக இருக்கும் நாயகன் ஜீவா,ஒரு பழங்கால அரண்மனையை வாடகைக்கு எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து காட்சிப்பொருளாக்க முனைகிறார்.அப்போது நடக்கும் சில அதிரடி
2022 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சுழல் இணையத் தொடரின் தொடர்ச்சியாகவே சுழல் 2 வெளியாகியிருக்கிறது.மையக்கதையில்தான் தொடர்ச்சியே தவிர திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் புதிதாக இருக்கின்றன. பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்? என்று
படிக்கும் காலத்தில் இதுதான் பெருமை என்று நினைத்துச் செய்யும் செயல்கள் வாழும் காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கருத்தை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கவர்ச்சி ஆகிய இனிப்புகளைத் தடவிக் கொடுத்திருக்கும் படம் டிராகன். பனிரெண்டாம் வகுப்பில் 96 விழுக்காடு மதிப்பெண் பெற்று வென்று பொறியியல் படிக்கப் போகும் நாயகன் பிரதீப் ரங்கநாதன், பெண்களைக் கவரவேண்டும் என்கிற ஒற்றைக்
அப்பா மகன் பாசம் மற்றும் உறவு குறித்து நிறையப் படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேரும் இந்தப்படத்தில் முந்தைய படங்களில் இல்லாத ஒரு சிக்கல் வைக்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரி நேர்மையானவர் எனப் பெயர் பெற்றவர் சமுத்திரக்கனி. அவருடைய மகன் தனராஜ் கொரனானி. அப்பாவுக்கு நேரெதிர்.நிறைய கெட்ட பழக்கங்கள்.ஒரு கட்டத்தில் அப்பாவைக் கொல்ல நினைக்கிறார். அது ஏன்? அவர் நினைத்தது
தனுஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மூன்றாவது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.அவருடைய அக்கா மகன் பவிஷை கதாநாயகனாக்கி எடுத்திருக்கிறார். 2கே கிட்ஸ் என்றழைக்கப்படும் இரண்டாயிரத்து இளைஞர்களின் காதல் அனுபவம் அதை எதிர்கொள்ளும் முறை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட கதை. நாயகன் பவிஷ் காதலில் தோல்வியடைந்தவர்.அவருடைய பெற்றோர் ஆடுகளம் நரேன் – சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்
குழந்தையென்றால் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுடையவர்களும் எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்த்து அதன்மீது தீரா நம்பிக்கையில் இருப்பவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக வந்திருக்கிறது பேபி அண்ட் பேபி. சத்யராஜின் மகனான ஜெய் அப்பாவுக்குப் பயந்து மனைவி பிரக்யா நாக்ராவுடன் வெளிநாடு சென்றுவிடுகிறார்.வேலைக்காக வெளிநாடு போயிருக்கும் யோகிபாபு அங்கேயே காதல்
பெரிய இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நாயகன் கவுண்டமணி திரும்ப வந்திருக்கிறார்.அவருடைய புகழ்பெற்ற பல நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிய சாய் ராஜகோபால் இயக்கியிருக்கிறார். அரசியல்வாதியான கவுண்டமணி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படுகிறார்.அவர், தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று
























