மர்மமான முறையில் நடக்கும் தற்கொலைகள் குறித்து காவல்துறை விசாரணை நடக்கிறது? அதில் வெளிப்பட்ட உண்மை என்ன? என்பதை திகிலுடனும் விறுவிறுப்புடனும் சொல்ல முயன்றிருக்கும் படம் அஸ்திரம். காவல்துறை அதிகாரியான நாயகன் ஷாம்,காவல்துறையில் இருந்து கொண்டே விசாரித்தால் அது சாதாரணமாகிப் போய்விடும் என்பதால்
விமர்சனம்
அமெரிக்கா என்றால் சுத்தமான நகரங்கள்,ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், ஆடம்பரமான மகிழுந்துகள், வசதியான வாழ்க்கை ஆகியனதாம் நினைவுக்கு வரும்.அந்நாட்டின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் படம் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ். அமெரிக்காவை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் ஏதிலிகள் கூட்டத்தில் இருக்கும் ஒரு சிறுவன் ஆரி லோபஸ். கால்பந்தாட்டக் கனவோடு அமெரிக்க நகரத்திற்கு
மனிதர்களின் அடிப்படைத் தேவையான குடிநீரையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கும் அவலநிலையில் வாழ்கிறோம். குடிநீர் மிகப்பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. நல்ல சுத்தமான தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை.இந்நிலையில், தண்ணீர் சேமிப்பை வலியுறுத்திப் பேச வந்திருக்கும் படம் வருணன். வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இப்படத்தில், ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற பெயரில் மதுரையிலிருந்து வந்து
உயிரின் மகத்துவத்தையும் உறவுகளின் மேன்மையையும் உணர்த்தும் வகையில் உருவாகியுள்ள படம் ஸ்வீட் ஹார்ட். நாயகன் ரியோராஜும் நாயகி கோபிகாரமேஷும் இணைந்து வாழ்கின்றனர்.அவர்கள் உறவின் காரணமாக நாயகி கர்ப்பம் தரிக்கிறார்.அதை நாயகன் ஏற்க மறுக்கிறார்.இதனால் பல குழப்பங்கள். இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது படம். ரியோராஜ் காதல்காட்சிகளில் இளமைத்துள்ளலுடனும் மோதல்
உலகமே நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கிறது.தனக்கு என்ன தேவை என்று எண்ணாமல் பக்கத்து வீட்டுக்காரன் என்ன செய்கிறான்? எதிர் வீட்டுக்காரன் என்ன வாங்குகிறான்? என்று பார்ப்பதும், தொலைக்காட்சி மற்றும் இணையங்களில் குவியும் ஆடம்பரப் பொருட்களின் விளம்பரங்களின் மீதான மயக்கமும் ஒரு நல்ல மனிதனை எப்படியெல்லாம் மாற்றும் என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாகச் சொல்லியிருக்கும் படம்
படவா என்கிற பெயரைப் பார்த்ததுமே பொறுப்பற்ற இளைஞர்களைப் பற்றிய படமென்று எண்ணத் தோன்றும்.ஆனால், இந்தப்பெயரை வைத்துக் கொண்டு இயற்கையைப் பாதுகாப்பது விவசாயத்தை மேம்படுத்துவது போன்ற உயரிய விசயங்களைப் பேசியிருக்கிறார்கள். வேலை வெட்டியின்றி சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு சுற்றிருக்கும் நாயகன் விமல்,ஊர்த்தலைவராகி அரசாங்கத்தின் ஒட்டுமொத்தப் பாராட்டைப் பெறுமளவுக்கு
நாட்டுக்குள் வீட்டுக்குள் காட்டுக்குள் நடக்கும் பேய்க்கதைகளைப் பார்த்திருப்போம்.இது கடலுக்குள் நடக்கும் பேய்க்கதை. தூத்துக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தோர் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடிவதில்லை.காரணம் அங்கொரு ஆன்மா மீன்பிடிக்க வருகிறவர்களைக் கொன்றுவிடுகிறது.இதனால் பல்லாண்டுகளாக அக்கிராம இளைஞர்கள் சரியான வேலை வாய்ப்பின்றித் தவிக்கிறார்கள்.அதனால் அவர்கள் குடும்பமும்
கிராமங்களில் சொல்லப்படும் பழங்கதைகள் உண்மையானவையா? என்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் படங்களை எடுக்கும் குழுவினர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் சொல்லப்படும் ஏழு கன்னிகள் கதையை ஆவணமாக்க காட்டுக்குள் செல்கிறார்கள்.அங்கு என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்வதுதான் மர்மர் படம். ரிஷி கதாபாத்திரத்தில் ரிச்சி கபூர், மெல்வின் கதாபாத்திரத்தில் தேவ்ராஜ்
நான்கு கதைகள்,நான்குமே அம்மா பாசத்தை மையமாகக் கொண்டவை.அதை வைத்துக் கொண்டு பல்வேறு நிறங்கொண்ட மனிதர்களைக் காட்டியிருக்கும் படம் நிறம் மாறும் உலகில். ரியோராஜ்,நட்டி,சாண்டி ஆகியோர் மகன்களாகக் காட்டுகிற பாசங்களும் பாரதிராஜா வடிவுக்கரசி,கனிகா,ஆதிரா,துளசி ஆகியோர் பெற்றோரின் சோகங்களும் பின்னிப்பிணைந்திருப்பதுதான் இந்தப்படம். மகன்களின் அம்மா மீதான பாசத்தை வெவ்வேறு விதமாக
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற காலம் மலையேறிவிட்டது என்பதை உரத்துச் சொல்லியிருக்கும் படம் ஜெண்டில்வுமன். கணவன் ஹரிகிருஷ்ணன் மீது அன்பாக இருக்கும் மனைவி லிஜோமோல்ஜோஸ்.ஒரு கட்டத்தில் கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதைத் தெரிந்தவுடன் கலங்கிப் போகாமல் அனைவரும் அதிரும்படி அதிரடியாகக் கணவரைக் கொலை செய்துவிடுகிறார்.அதன்பின் என்னவெல்லாம்
























