நடிகர் தனுஷ் 2012 ஆம் ஆண்டு வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்கிற சொந்தப்பட நிறுவனம் தொடங்கினார். அதில் முதலாவதாக அவர் மனைவி இயக்கிய 3 படம் தயாரிக்கப்பட்டது. அதன்பின், சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்கள் விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் உட்பட பல படங்களைத் தயாரித்தார்.
செய்திகள்
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி, ‘சந்திரமுகி 2’ படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராகவா
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,காஜல் அகர்வால்,நெடுமுடி வேணு, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த படம் இந்தியன் 2. இப்படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் நேற்று மாலை 7 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 48 . மார்ச் மாதம் இறுதியில் அவருக்கு கொரோனா பாதிப்பால் தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்தது . அதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவாஜி
நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில், நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்கவேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் தயாராகி வெளிவராமல் இருக்கின்றன. இதனால் அவரை வைத்துப் புதிய படங்கள் எடுக்கத் திரைத்துறையினர் தயங்குகின்றனர். ஆனால், இணையதளத் தொடர்களில் அவருக்கு இடம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் ஓர் இணையதளத் தொடரில் அவர் நடிக்கவிருக்கிறாராம். அத்தொடரில் அவர், முன்னாள் தமிழ்த்திரையுலக
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்
தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக்
தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று கல்கியின் பொன்னியின்செல்வன். அது திரைப்படமாக உருவாகியிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கும் இப்படத்தின் முதல்பாகம் இவ்வாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும்
2010 ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. அப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை எல்லாமே நகரத்துப் படங்கள்தாம். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராட்சசி இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன்
விஜய்சேதுபதி நடிப்பில் தமிழில் இரண்டு படங்கள் தயாராக இருக்கின்றன. அந்தப்படங்களையும் அவர் முடித்துக்கொடுத்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவற்றிற்கடுத்து அவருக்குத் தமிழில் படங்கள் இல்லை. இப்போது, இணையத்தொடர் மற்றும் படங்கள் என இந்தி மொழியில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் அதனால் நல்ல வருமானம் இருந்தாலும் தமிழில் படமே இல்லை






















