சந்திரமுகி 2 கதையில் சாய்பல்லவி சொன்ன திருத்தம் – கொந்தளித்த பி.வாசு
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது.
2020 ஏப்ரல் 9 ஆம் தேதி, ‘சந்திரமுகி 2’ படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராகவா லாரன்ஸ்.
இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருந்த முகநூல் பதிவில்…..
நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, உங்கள் அனைவரும் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்கிறேன். எனது அடுத்த படங்களில் ஒன்று என் தலைவரின் படமான ‘சந்திரமுகி 2’. தலைவரின் அனுமதி மற்றும் ஆசியுடன் இந்தப் படத்தில் நடிப்பது என் அதிர்ஷ்டம். பி.வாசு சார் இயக்க, எனது அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சார் தயாரிக்கவுள்ளார்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
அதன்பின் அப்படம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
ஜூன் 14,2022 அன்று மீண்டும் வெளியான அறிவிப்பில்…
பி.வாசு இயக்கும் சந்திரமுகி இரண்டாம் பாகம் படத்தை, லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.முதல் பாகத்தைப்போல, இந்தப்படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். இயக்குநர் பி.வாசு சாய்பல்லவியிடம் கதை சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட பின்பு, அதில் பல மாற்றங்களைச் சொன்னாராம் சாய்பல்லவி. அதோடு கடைச்யில் என்னைக் கடவுள் போல் ஆக்குவதானால் நான் நடிக்கிறேன் என்றும் அதிரடியாகச் சொல்லியிருக்கிறார்.
கதையில் திருத்தங்கள் சொன்னபோதே கடுப்பான பி.வாசு கடைசியில் அவர் சொன்னதைக் கேட்டு கொந்தளித்துவிட்டாராம். அதனால், படத்தில் அவர் வேண்டாம் என்று முடிவாகச் சொல்லிவிட்டாராம்.
எனவே மீண்டும் கதாநாயகி தேடல் நடந்துகொண்டிருக்கிறது. அபர்ணா பாலமுரளி, ராஷிகண்ணா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.











