அண்மையில் வெளியான போர்த்தொழில் படம் பெரிய வெற்றி அடைந்தது. பெரிய கதாநாயகர்களின் படங்கள்தாம் திரையரங்குகளில் நல்ல வசூல் செய்யும் என்கிற கருத்தை உடைக்கும் வண்ணம் சுமார் 13 கோடி வரை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இதனால் இப்படத்தில் நாயகனாக நடித்த அசோக்செல்வனுக்கு
சினிமா
தாராள பிரபு, ஓமணப்பெண்ணே ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, எல்ஜிஎம், பார்க்கிங்,லப்பர்பந்து ஆகிய படங்களோடு அதிரடிப்படமாக உருவாகிக் கொண்டிருக்கும் டீசல் ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் ஹரீஷ்கல்யாண். இவற்றில் டீசல் படத்தை அடங்காதே பட இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்குகிறார். இப்படத்தை தர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் (Third Eye Entertainment) சார்பில் எம்.தேவராஜுலு
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதிஷங்கர் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் மாவீரன். இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின்,சரிதா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் ஜூலை 14 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டி ஜூலை இரண்டாம்தேதி இந்தப்படத்துக்கான விளம்பர நிகழ்வு பெரிய அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள்
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் பியார்பிரேமாகாதல். ஹரீஷ்கல்யாண் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தை இயக்கியிருந்தார் இளன். அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இயக்குநர் இளனுக்கு அடுத்தபடம் எளிதாக அமையவில்லை. மறுபடியும் ஹரீஷ்கல்யாணையே கதாநாயகனாக வைத்து ஸ்டார் என்கிற படத்தைத் தொடங்கினார்கள்.ஆனால் அந்தப்படம் தொடரவில்லை. அதன்பின், இளன் சொன்ன கதை நடிகர்
செல்வராகன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 7 ஜி ரெயின்போ காலனி.இப்படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் செட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நாயகன் ரவிகிருஷ்ணாவின் அப்பா ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு
நடிகர்திலகம் சிவாஜிகணேசன், தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் சுமார் 1 ஏக்கர் 15 சென்ட் பரப்பளவு நிலத்தில் இரட்டைத் திரையரங்குகள் கட்டினார். ஒரு திரையரங்குக்கு சாந்தி என தன்னுடைய மகளின் பெயரையும், மற்றொரு திரையரங்குக்கு தன்னுடைய மனைவி கமலாவின் பெயரையும் சூட்டினார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திறப்பு விழா நடந்தது. அப்போதைய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர்
கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி முடியவில்லையாம். இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்றும் ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள். இப்படத்துக்கு அடுத்து எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும்,
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு படம் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தின் இரண்டாம்பாகமான தில்லுக்கு துட்டு 2, 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையும் ராம்பாலாவே இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் தொடங்கப்பட்டது. இம்முறை ராம்பாலா இயக்கவில்லை. அவரிடம் பணியாற்றிய பிரேமானந்த் என்பவர் இயக்கியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் தண்டட்டி.இப்படத்தில், கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.இவர்களோடு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து,ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளியையொட்டி நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போது அவர், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அப்படத்தின்























