சினிமா செய்திகள்

நெல்சன் தயாரிப்பில் கவின் – புதியபட விவரம்

லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்குப் பிறகு அப்படங்களில் நாயகனாக நடித்திருந்த கவினின் சந்தைமதிப்பு உயர்ந்திருக்கிறது.

திரையுலகில் வெற்றி பெற்றுவிட்டுத்தான் திருமணம் என்று பிடிவாதமாக இருந்தார். அதுபோலவே இணையத்தில் வெளியான லிஃப்ட், திரையரங்குகளில் வெளியான டாடா ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற பின்பு அண்மையில் பல்லாண்டுகள் இரகசியமாக வைத்திருந்த காதலியைக் கரம் பிடித்தார்.

இப்போது அவர், இளன் இயக்கும் ஸ்டார் மற்றும் நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்கடுத்து, நிறையப்படங்களில் நடிக்க கவினுக்கு அழைப்பு வந்துகொண்டிருக்கிறதாம். ஆனால் அவர் படங்களைத் தேர்வு செய்வதில் மிக நிதானமாக இருக்கிறாராம்.

இப்போது புதிய படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கவின்.

அந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.ஆம், டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களின் இயக்குநரேதான்.

அந்தப்படத்தை இயக்கப்போகிறவர் நெல்சனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சிவா என்பவர்.

கவின், நெல்சன் ஆகியோர் நீண்டகால நண்பர்கள், இருவரும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்ததும் ஒருவருக்கொருவர் உதவும் வகையில் இந்தப்படத்தை உருவாக்கவிருக்கிறார்கள்.

இப்படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டனவாம். இப்போதைக்கு நெல்சன் அலுவலகத்திலேயே இந்தப்படத்தின் வேலைகள் நடக்கின்றன என்கிறார்கள்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts