Home செய்திகள் Archive by category சினிமா (Page 155)

சினிமா

சினிமா செய்திகள்

கேஜிஎஃப் 2 பட தமிழக வெளியீட்டு உரிமை – விஷாலை விட்டு எஸ்.ஆர்.பிரபுவிடம் வந்தது எப்படி?

2018 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எஃப்’.யஷ் நடித்த இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்துர் தயாரித்துள்ளார்.
சினிமா செய்திகள்

தொடங்குமுன்பே சிக்கலில் சிக்கிய பிரசாந்தின் அந்தகன் – காரணம் என்ன?

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்திப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தின்
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் விஜய்சேதுபதி படப்பிடிப்புக்குச் சிக்கல்

கிஷோர், சூரி, விஜய்சேதுபதி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.  ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

தாயே இல்லா தாலாட்டு தந்த புதிய இசையமைப்பாளர் ஜான் ஏ.அலெக்ஸிஸ்

பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான படம் ‘பழகிய நாட்கள்’. மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நாட்டுப்புறப் பாடகர் செந்தில் கணேஷ், இயக்குநர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர். இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே
சினிமா செய்திகள்

சூர்யா 40 படத்தின் வில்லன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதியபடம் சூர்யா 40 என்று அழைக்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக
சினிமா செய்திகள்

இரண்டு நிபந்தனைகளுடன் தடைகளைக் கடந்து இன்று வெளியாகிறது விஷாலின் சக்ரா

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. இந்தப் படம் இன்று (பிப்ரவரி 19) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’ படத்தின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் படத்துக்குத் தடை கோரி ட்ரைடண்ட் நிறுவனம் சென்னை உயர்
சினிமா செய்திகள்

ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் பட தமிழக உரிமையைக் கைப்பற்றிய லைகா – விலை எவ்வளவு தெரியுமா?

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகினார் அமிதாப்பச்சன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து
சினிமா செய்திகள்

சக்ரா படத்துக்குத் தடை கேட்டு வழக்கு – பெரிய நிறுவனத்தின் முடிவால் ரிலீசில் சிக்கல்

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலமாக அவரே தயாரித்துள்ளார். 2020 செப்டெம்பர் மாதம் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட
சினிமா செய்திகள்

சினிமா பொழுதுபோக்கல்ல தொழில் – அஜீத் கோபம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டு வருகிறது படக்குழு. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படம் தொடர்பாக எந்தவொரு தகவலையும் படக்குழுவினர் கொடுக்கவில்லை