சினிமா செய்திகள்

சூரரைப்போற்று நாயகி அபர்ணாபாலமுரளியின் அடாவடி – வருந்தும் இயக்குநர்

நாளைய இயக்குநர் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற ராசு ரஞ்சித் எழுதி இயக்கியுள்ள படம் தீதும் நன்றும். சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ளார்.

இயக்குநர் ராசு ரஞ்சித், ஈசன் ஆகியோர் நாயகர்களாகவும் சந்தீப் ராஜ் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளனர்.

படத்தில் ஈசன் ஜோடியாக கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ராசு ரஞ்சித் ஜோடியாக லிஜிமோல் ஜோஸ் நடித்துள்ளார்.அபர்ணா பாலமுரளி சூர்யா ஜோடியாக சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்தார். லிஜிமோல்ஜோஸ் சித்தார்த் ஜோடியாக சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்திருந்தவர்.

இப்படம் இவ்வாரம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளுக்காக நாயகிகளாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளி மற்றும் லிஜிமோல்ஜோஸ் ஆகியோரை அழைத்த போது வர மறுத்துவிட்டார்களாம்.

அபர்ணா பாலமுரளியை இந்தப்படத்தில் ஒப்பந்தம் செய்த நேரத்தில் அவர் சூர்யா படத்தில் ஒப்பந்தமாகவேயில்லை.மலையாளத்தில் ஓரிரு படங்களும் தமிழில் 8 தோட்டாக்கள் படத்திலும் நடித்திருந்தார். இப்பட வெளீயீடு தாமதமான இடைவெளீயில் அபர்ணா நடித்த சூரரைப்போற்று படம் வெளியாகிவிட்டது. அதனால் அவர் பெரிய நடிகையாகிவிட்டதாக நினைத்துக் கொண்டார். எனவே இந்தப்படத்தின் விளம்பரங்களுக்கு வரமுடியாது என்று மறுத்துவிட்டாராம்.

அவர் வரவில்லை என்பதால் நானும் வர முடியாது என்று லிஜிமோல்ஜோஸும் சொல்லிவிட்டாராம்.

இப்படம் வெளியாவது குறித்துப் பேசிய இயக்குநர் ராசு ரஞ்சித், பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இப்படம் வெளியாகிறது. படம் வெளியாகிறது என்று சந்தோசம் கூட இல்லை. அந்தளவுக்கு நொந்திருக்கிறோம்.இப்பட்த்தில் ஒப்பந்தமாகும்போது புதுமுகங்களாக இருந்த அபர்ணா பாலமுரளி மற்றும் லிஜிமோல்ஜோஸ் ஆகியோர் இப்போது பெரிய நடிகைகளாகிவிட்டதாகச் சொல்லி எங்கள் பட விளம்பரங்களுக்கு வர மறுத்துவிட்டார்கள்.இவை எல்லாவற்றையும் தாண்டி படம் பார்த்த அனைவரும் படத்தைப் பாராட்டிப் பேசுவதுதான் ஆறுதலாக இருக்கிறது என்கிறார்.

Related Posts