செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனி ரியல் ஹீரோ – புகழும் ஆத்மிகா

ஆள், மெட்ரோ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோடியில் ஒருவன்.

விஜய் ஆண்டனி, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப்படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா தயாரித்திருக்கிறார்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க,ஒளிப்பதிவினை என்.எஸ்.உதயகுமார் மேற்கொள்கிறார்.

நாயகன் விஜய் ஆண்டனி படம் பற்றிக்கூறியதாவது…..:

கொலைகாரன் படத்திற்குப் பிறகு இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தைத் தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில் நடிப்பேன். ஆத்மீகாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு திறமையான நடிகை கூட. நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்புப்பெற்றுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை ஆத்மீகா கூறியதாவது…..

இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோன காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த கணமே இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள். படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும்,தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார்.அந்தவகையில் இவர் ஒரு ரியல் லைஃப் ஹீரோ. இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

படத்தைப்பற்றி இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கூறியதாவது….

கோடியில் ஒருவன் படத்தில் விஜய்ஆண்டனி டியூசன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ரோ படத்தைப் பார்த்து எனக்கு இந்தப்படத்தை இயக்க வாய்ப்பளித்தார். இந்தப்படத்தில் அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், சிக்கல்களால் பாதிக்கப்படுகிற ஒரு சாமானிய மனிதன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க ஒரு ஜனரஞ்சகமான விறுவிறுப்பான படம்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது….

கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது.ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குநர்.இந்தப்படத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்திலும் அனைவரின் ஒத்துழைப்போடும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.இந்தப்படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொள்கிறார்.முதன்முதலாக எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். படத்தின் முதல் பாதி அருமையாக வந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்கிறோம்.

விஜய் ஆண்டனி கடுமையான உழைப்பாளி. படப்பிடிப்பு நாடகக்கும்போதே ஷூட் முடித்ததும் மறுபுறம் எடிட்டிங் வேலைகளைக் கவனிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts