நடிப்பு என்பது வசனம் பேசுவது என்கிற எண்ணம் நிரம்பியுள்ள திரையுலகில் ஒரு நடிகரின் உண்மையான நடிப்புத் திறமையை அறிய அவருக்கு வாய்பேச முடியாத வேடம் கொடுக்கவேண்டும் என்பார்கள். இந்தப்படத்தில் வாய்பேசமுடியாத காது கேளாத வேடம் அருள்நிதிக்கு.அதைச் சிறப்பாகச் செய்து தன் நடிப்பாற்றலைக் காட்டியுள்ளார்
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எம்ஜிஆர் நடித்த நினைத்ததைமுடிப்பவன் படத்துக்காக 1975 ஆம் ஆண்டு மருதகாசி எழுதிய வரி இன்றைக்கு உதயநிதி நடிக்கும் படத்தின் கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. நடுத்தரவர்க்க இளைஞரான உதயநிதி, மதுபோதையில் இருக்கும் பூமிகாவுக்கு உதவுகிறார். அது அவருக்குப் பெரும் சிக்கலாகிறது. அது என்ன சிக்கல்? அது எப்படி உண்டானது? அதற்கான தீர்வு என்ன?
வைபவ் அவர் மனைவி சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர், தங்கப்புதையலைத் தேடி சென்னையிலிருந்து கிராமமொன்றுக்குச் செல்கின்றனர். அந்தக் கிராமத்தில் அவர்கள் சந்திக்கும் அனைவருமே பேய்கள். அது தெரிந்ததும் அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தப்பினார்களா? இல்லையா? என்பதைப் பயத்துடன் சொல்ல முயன்றிருக்கும் படம்தான் காட்டேரி. வைபவ் வழக்கம்போல் அசட்டுத்தனமான
விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டிடி.ராஜா தயாரித்த கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா செபடம்பர் 22 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கோடியில் ஒருவன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் விஜய் ஆண்டனி பேசியதாவது….. வந்திருக்கும்
தேனி மாவட்டம் கம்பத்துக்குப் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் விஜய் ஆண்டனிக்கு,அம்மாவின் கட்டளையை ஏற்று ஐஏஎஸ் படித்து ஆட்சியர் ஆகி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பது இலட்சியம். அதற்காகச் சென்னை வருகிறார். வருகிற இடத்தில் அவருக்கு உள்ளூர் ரவுடி முதல் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் வரை பல சிக்கல்கள். அவற்றைக் கடந்து ஐஏஎஸ் ஆனாரா? இல்லையா? என்கிற கேள்விக்கு விடை
ஆள், மெட்ரோ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோடியில் ஒருவன். விஜய் ஆண்டனி, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப்படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா தயாரித்திருக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க,ஒளிப்பதிவினை என்.எஸ்.உதயகுமார் மேற்கொள்கிறார். நாயகன்
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை டீகே இயக்கி உள்ளார். இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (டிசம்பர்.25) வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
Katteri Official Trailer | Vaibhav, Varalaxmi, Aathmika, Sonam Bajwa | Deekay | SN Prasad



















