செய்திக் குறிப்புகள்

19 ஆவது புனே சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியிருக்கும் தமிழ்ப்படம் – விவரங்கள்

இ.வி.கணேஷ்பாபு காதாநாயகனாகவும் சிருஷ்டிடாங்கே கதாநாயகியாகவும் மற்றும் கீதா கைலாசம், ‘மாஸ்டர்’
நிதீஷ், எழுத்தாளர் இந்திராசௌந்தர்ராஜன், கன்னிகா, ஓவியர் ஸ்யாம்,செம்மலர்அன்னம், ‘மெட்டிஒலி’சாந்தி,காதல் கந்தாஸ், சம்பத்ராம், ஆகியோர் நடித்திருக்கும் படம் கட்டில்.

இந்தப் படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை, திரைக்கதை,வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். ஸ்ரீகாந்த்தேவா இசையில் வைரமுத்து, மதன்கார்க்கி பாடல் எழுத, சித்ஸ்ரீராம் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

நாயகனாக நடித்திருக்கும் இ.வி.கணேஷ்பாபுவே தயாரித்து இயக்கியும் இருக்கிறார்.

இத்திரைப்படம், மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம் மற்றும் புனே பிலிம் ஃபவுண்டேசன் ஆகியன இணைந்து நடத்தும் 19 ஆவது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியிருக்கிறது.

இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது…..,

வருடம்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக `கட்டில் திரைப்பட உருவாக்கம்` என்ற நூலை வெளியிடுகிறேன்.

சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வாரி வழங்கிய சாதனையாளர்கள் சிலர் “கட்டில்” திரைப்படத்திலும் தங்களது பங்களிப்பைத் தனிச்சிறப்புடன் வழங்கி இருக்கிறார்கள். இந்த ஆளுமைகளின் செயற்பாட்டால் “கட்டில்” எப்படி உருவானது என்பதைச் சொல்வதே இந்த நூலின் நோக்கம்.

கட்டிலில் பயணித்தவர்களின் அனுபவ மொழிகளால் நிரம்பி வழிகிறது இந்த நூல்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மார்ச் 9 அன்று நடைபெற்றது.

Related Posts