பிக்பாஸ் தர்ஷனுக்கு அமோக ஆதரவு எதனால் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷனுக்கு அமோக ஆதரவு. பிக்பாஸை திட்டியும் தர்ஷனை ஆதரித்தும் ஏராளமானோர் பேசிவருகிறார்கள்.
அவற்றில் ஒன்று…
ஏன் தர்ஷன் வெளியேறிய போது இத்தனை அங்கலாய்ப்புகள், புலம்பல்கள், அழுகைகள்.
யார் வேண்டுமானாலும் நடிகனாகலாம். ஆனால் நாயகனாக மாற மக்களின் ஆதரவு வேண்டும். தர்ஷன் நாயகனாக கொண்டாடப்படுவதற்கு காரணம் அவன் உடல்வலுவுடையவன் என்பதனாலா, போட்டிகளில் சிரத்தையாக பங்குபெற்று வெற்றி பெறுபவன் என்பதனாலோ அல்ல.
அவன் நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த தருணம் தான் இன்றைக்கும் அவனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை லட்சத்தை தாண்டி போக வைத்திருக்கிறது.
அந்த தருணம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய காட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவானதல்ல.
பாட்ஷா படத்துல அது வரைக்கு அடி வாங்கி கொட்டும் மழையில் சிரித்துக் கொண்டே இருக்கும் ரஜினி தங்கையின் ரத்தம் பார்த்ததும் சிலிர்த்தெழுந்து வெளிப்படும் தருணம்
விஸ்வரூபம் படத்துல கொல்லப்படும் நேரத்தில் கமல் கெஞ்சிக் கூத்தாடி தொழுகை நடத்தி எகிறிப் பாய்ந்து கண்ணை நோண்டி குரூர கொலை செய்யும் தருணம்
கில்லி படத்துல மதுரை மீனாட்சியம்மன் கோயில் வாசல்ல கோணிப்பைய மழைக்கு தலைல போட்டுப் போவாய்ங்களே அந்த மாதிரி போட்டு நடைக்கும் ஓட்டத்துக்கும் இடைப்பட்ட ஒன்றை செய்து கொண்டிருக்கும் நாயகன் முத்துப்பாண்டிய அடிச்சி வீழ்த்தி நாயகியை காப்பாற்றும் அந்த தருணம்
வேதாளம் படத்துல போட்ல அடிவாங்கி உள் பனியன் மட்டும் போட்டுக்கிட்டு அய்யா உட்டுடுங்க அய்யா ன்னு கெஞ்சி வில்லன் கிட்ட வந்ததும் க்ராபிக்ஸ்ல மசில்ஸ்ஸை முறுக்கி ஆஸ்கார் லெவலுக்கு அழுகையிலிருந்து சிறிது சிறிதா மாற்றம் கண்டு ஒரு கெட்ட சிரிப்பு சிரிச்சிக்கிட்டே சுடும் அந்த தருணம்
இந்திரா எனும் தெலுகு படத்தில் நாயகனை நாயகி விரும்ப, சாதாரணமாக காசியில் படகு ஓட்டும் ஆண்மகன் எனக்கு மருமகனா என்று பொங்கியெழுந்து, பீரங்கி கொண்டு வந்து நாயகனை சுட உத்தரவிடும் உபி மாநில கவர்னர், அந்த நாயகன் யாரென்று தெரிந்த பின்னே ஓடி வந்து நாயகன் காலில் விழுந்து பொண்ணை ஏற்றுக் கொள்ள சொல்லும் தருணம்
லெஜண்ட் படத்தில் கர்ண கொடூர வில்லன்கள் கொறாமையா கொலை செய்யப்பட வெகுண்டெழுந்த வில்லன், நாயகனையும் நாயகனின் குடும்பத்தையும் பலி போட ஐநூறு அடியாட்களுடன் முற்றுகையிட்டு நாயகனை சுட்டுவீழ்த்தி, குடும்பத்தை சுற்றி நூறு பேர் கொடிய ஆயுதங்களுடன் நிற்கும் போது, கூட்டத்துல இருந்து ஒரு ஆயா தேவுடா ன்னு கத்த, அந்த ஓசை சுத்தி வந்து, ஏகப்பட்ட மணி ஒலிக்க ஒரு அறுபது வயசு தாத்தா மலையுச்சியில் இருந்து வெளிப்பட்டு ஒரே குத்தில் பத்து பேரையும் பத்து நிமிசத்தில் நூறு பேரையும் கொன்னுப் போட்டு நான் தாண்டா நாயகன் என் உறுதிப்படுத்தும் தருணம்
இவ்வளவு ஆக்சன் காட்சிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது மொத்த பிக்பாஸ் செட்டையும் 16 போட்டியாளர்களையும் ஆட்டிப் படைத்த வனிதா என்ற கொடுங்கோல் ஆட்சியாளரை எதிர்த்து கேள்வி கேட்டு சரித்திரம் படைத்த அந்த தருணம்
பாகுபலி படத்துல பல்வாள்தேவன் சிலைக்கு பின்னால் பாகுபலி சிலை பெருசா தெரியுமே, அந்த மொமண்ட் தான் ஒரு ஆட்டத்தில் போங்கா ஒரு தீர்ப்பு சொல்ல தர்ஷன் குரல் உயர்த்திய தருணம் தான் இவ்வளவு ஆதரவை கொடுத்துள்ளது.
ரமணா படத்துல சொன்ன மாதிரி வீ ஆர் நாட் செண்ட்டிமெண்டல் இடியட்ஸ், சாமானியமாக ஒருத்தனை நாயகனான ஏற்றுக் கொள்ள மாட்டோம். அப்படி ஏற்றுக் கொண்டால் அவனை சட்டென உதறி விடவும் மாட்டோம்.
ரசிகனை ஏமாற்றும் பல நாயகன் இங்கிருக்கலாம். ஆனால் நாயகனை கைவிட்ட ஒரு ரசிகன் கூட இங்கு கிடையாது. இன்னைக்கும் ராமராஜன் ரசிகனாக இருக்கும் நானே அதற்கு சாட்சி.
– எம்.செந்தில்குமார்