விஜய் 64 படத்தில் விஜய்சேதுபதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இன்று (செப்டம்பர் 30) முதல் அடுத்த 3 நாட்களுக்கு ‘தளபதி 64’ குறித்த அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்தது.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு, விஜய்யுடன் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.













