அனிதா பத்மா பிருந்தா என்கிற பெயரில் ஒரு புதிய படம் தயாராகவிருக்கிறது. ஏ.எல்.சூர்யா எழுதி இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார். இப்படம் உருவானது எப்படி? என்கிற மிக சுவாரசியமான ஒரு விடை இருக்கிறது. திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற வேட்கையில் இசை பயின்று ஓரிரு படங்களுக்கு இசையமைத்துள்ளார்
இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. 22.07.2019 அன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
1975 ஜூலை 23 ஆண் குழந்தை பிறந்தது. ம்யிலாப்பூர் கல்யாணி நர்சிங் ஹோமில் இன்று அதிகாலை 2.51 மணிக்கு என் துணைவி ஆண் மகவைப் பெற்றெடுத்தார் – நடிகர் சிவகுமாரின் நாட்குறிப்பிலிருந்து. சிவகுமார் குறிப்பிட்டுள்ள அந்த ஆண் மகவுதான் இன்றைய சூர்யா. படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவரை நேருக்குநேர் படத்தில் நடிகராக்க்கினார் இயக்குநர் வசந்த்.
ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜூ விஸ்வநாத் அடுத்ததாக புதுமுகங்களை வைத்து சென்னை பழனி மார்ஸ் என்ற படமொன்றை உருவாக்கி இருக்கிறார். பிஜூ இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பதுடன், ஒளிப்பதிவு, படத்தொகுப்பையும் கவனித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ் & விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,சாயிஷா, ஆர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “காப்பான்”. ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் ஜூலை 21 மாலை நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். காப்பான் படத்தில் குறிலே குறிலே குயிலே
இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நந்தன் சுப்பராயன் எழுதி இயக்கியிருக்கும் படம் மயூரன். மயூரன் என்றால் விரைந்து உன்னைக் காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். ஒரு கல்லூரி விடுதியைக் கதைக்களமாகக் கொண்ட படம். கல்லூரி விடுதியில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் அதன் நிழல் உலகத்தையும் சொல்லும் விதமாக அமைந்துள்ளது. சிதம்பரம் நகரில் உள்ள கல்லூரி
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிராங்க் ஷோ நடத்தும் குழுவில் அமலாபால் இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் அவர்கள் செய்யும் அடாவடிகள் மற்றும் அதன் விளைவுகள்தாம் படம். தமிழகத்தின் தென்கோடியில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்பை மறைக்கும் உரிமைக்காக மார்புகளை அறுத்தெறிந்த பெண்ணின் அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. அப்படிப் போராடிப் பெற்ற உரிமை இது. அதை அலட்சியம்
காவல்துறை அதிகாரியாக இருந்து பின் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவராக மாறுகிறார் விக்ரம். பெரிய திருட்டு ஒன்றைச் செய்யப் போகுமிடத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அளவுக்குச் சிக்கல். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயும் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அங்கிருக்கும் ஆண் செவிலியரான அபிஹாசன் அவரைக் காப்பாற்றுகிறார். அதன்விளைவு அபி ஹாசனின் நிறைமாதக் கர்ப்பிணி மனைவி
மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. இப்படத்தை விஜி சுப்பிரமணி என்பவர் தயாரித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி காலைக்காட்சி மற்றும் மதியக்காட்சிகளில் படம் வெளியாகவில்லை. மாலை ஆறு மணிக்குப் படம் வெளியானது. இந்தத் தாமதத்துக்குக் காரணம், படத்தின் தயாரிப்பாளர் ஏற்கெனவே தயாரித்த
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் தனா. இவர் விஜய்யேசுதாஸ் நாயகனாக நடித்த படைவீரன் படத்தை இயக்கியிருந்தார். அடுத்து அவர் இயக்கும் படம் வானம் கொட்டட்டும். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்,மடானோசெபாஸ்டின், நடிகர் சாந்தனு ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன்,




















