நடிகர் சூர்யா மற்றும் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு டிசம்பர் 7 அன்று சென்னையில் பூசையுடன் தொடங்கியது. இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய வெற்றிகள் மூலம் கவனம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ந்டிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.இன்று அந்தப் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்டார். கோயில்பட்டியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அரசன் படம் வடசென்னையை மையப்படுத்திய கதைக்களம் கொண்டது என்று வெற்றிமாறனே சொல்லியிருந்தார்.அதனால் வடசென்னை பகுதியைப் பிரதியெடுத்து பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படுகிறது.அங்குதான்
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி,ஜி.எம்.சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. இந்தப்படத்துக்கு
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் முதல் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய வெற்றிகள் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் நஸ்லென்
தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.அதற்கு முன்னதாக, இளம் நாயகர்கள் நடிப்பது போன்றதொரு காதல் கதையை எழுதி வைத்துக் கொண்டு அதில் நடிக்க நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம். அதற்காக துருவ் விக்ரம் உட்பட சில நடிகர்களிடம் பேசினார்கள். அவர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.அதன்பின்,சில
நாட்டில் நடக்கும் மோசடிகள் பலவிதம்.அதுவும் வரவு, செலவு,வர்த்தகம் ஆகிய எல்லாம் இணையதளம் வாயிலாக நடக்கிற இக்காலகட்டத்தில் அதிலும் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன.அவற்றில் முக்கியமான நான்கு வித மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் படம் நிர்வாகம் பொறுப்பல்ல. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் கார்த்தீஸ்வரன்.அவர் பல
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் அங்கம்மாள். இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையான உழைப்பாளியாக மட்டும் இன்றி, தைரியமான பெண்ணாக இருக்கிறார். அந்தக் காலப் பெண்கள் போல இரவிக்கை அணியாத பெண்மணியாக இருப்பதுதான்
கட்டிடப் பொறியாளர் நாயகி சாக்ஷிஅகர்வாலுக்கும் ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் விஜய் விஷ்வாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.அதேநேரம் சாக்ஷி அகர்வாலை கல்யாணம் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் கட்டுமான தொழிலாளி செல்லக்குட்டி.அது ஏன்? அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கும் படம் சாரா. படத்தின் முதன்மை
ஆகஸ்ட் 28,2023 அன்று லைகா நிறுவனம் வெளியிட்ட ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.அதில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருந்தது. நடிகர் விஜய் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய், கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு கனடா சென்று திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்பு மற்றும் திரைப்படத்தொழில்நுட்பங்கள்























