ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால், கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், அவர்கள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டும் வழங்கினார்கள். விஜய் பிறந்த நாளன்று சமூக
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாத மத்தியில் தொடங்கி படிப்படியாகத் திரையரங்குகள் மூடப்பட்டன. மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்
ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள், கீர்த்திசுரேஷ் நடித்த பெண்குயின், காயத்ரி ரகுராம் நடித்த யாதுமாகி நின்றாய் ஆகிய படங்கள் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகின. இவற்றில் பொன்மகள்வந்தாள் படம் தவிர மற்ற இரு படங்களும் கவனிப்பாரின்றிப் போய்விட்டன. இந்நிலையில் நான்காவதாக ஒரு படம் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது. சந்தான மூர்த்தி இயக்கத்தில்
இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.இந்நாளில் விஜய் தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், நாளேடுகளில் விஜய் பிறந்தநாளையொட்டி விளம்பரம் கொடுத்திருக்கிறார். அண்மைக்காலங்களில் ஒரு நடிகரின் பிறந்தநாளுக்கு தமிழகம் முழுக்க விளம்பரம் வந்திருப்பது இப்போதுதான் என்கிறார்கள். மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ்
புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிராஜ், நட்டி, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்த படம் வால்டர். பிரபுதிலக் தயாரிப்பில் உருவான இந்தப்படம் மார்ச் 13 ஆம் நாள் வெளியானது. ஒரு சமுதாயக் கருத்தை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா சிக்கல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் ஓட்டம் தடைபட்டது. மூன்று மாதங்கள் கடந்தும்
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்… நண்பர்களுக்கு வணக்கம். இன்று என் தம்பியின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது. அவரது
பெண் குயின் படத்தை போதுமான அளவுக்குத் திட்டித் தீர்த்துவிட்டாகி் விட்டது. இருந்த போதும் திரில்லர் என்ற வகைமையைப் பற்றி தமிழ் சினிமாவில் இருக்கும் புரிதல் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. திரில்லர் படங்களின் அடிப்படை அடுத்து என்ன வரப் போகிறதோ என்ற பதைப்புடன் சீட் நுனியில் பார்வையாளர்களை உட்கார வைப்பதாகும். பெண் குயின் படம் என்ன செய்கிறதென்றால் அடுத்து
சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் இடம்பெற்றுள்ள, ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு என்கிற பாடல் உருவான விதம் குறித்த காணொலியை இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ளார். வெளியானதுமே ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அந்தக் காணொலி….
தமிழ்த்திரையுலகின் பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் கதாநாயகியாக நடித்தார்.அதன்பின் நடன இயக்குநர் அவதாரம் எடுத்தார். முன்னணி இயக்குநர்கள் மற்றும் நாயகர்களின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிய காயத்ரி ரகுராம், இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். அதன்பின் ‘யாதுமாகி நின்றாய்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார். ‘சுஜா
உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா, அரசியல் தலைவர்களையும் அமைச்சர்களையும் கூட விட்டுவைக்கவில்லை.அதோடு தமிழ்த் திரையுலகையும் அது பாதித்திருக்கிறது.திரையுலகில் பலருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதை இரகசியமாக வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதைத்தாண்டி திரையுலகில் பலருக்குத் தெரிந்த இரகசியமாக உலாவரும் தகவல்களில், இயக்குநர் மிஷ்கின்,





















