மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவற்றிற்கடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் நான்காவது படம் நேற்று (டிசம்பர் 14,2020) தொடங்கியிருக்கிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அட்லியிடம் உதவி
நடிகை சித்ரா டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்னத் திரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நடிகை சித்ராவுக்கு ஹேம்நாத் என்பவரோடு திருமண நிச்சயதார்த்தம்
கூர்கா படத்தைத் தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது நடிகர்சசிகுமார் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கின்றது “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ்
தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார்.அவருடைய பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா
2017 ஆம் ஆண்டு தொடங்கி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் ‘செம்பருத்தி’. இந்தத் தொடரில் கார்த்திக் ராஜ், சபனா, ப்ரியா ராமன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது ஒளிபரப்பாகி வரும் பகுதிகளை எம்.சங்கர் இயக்கி வருகிறார். இந்தத் தொடரிலிருந்து கார்த்திக் ராஜ் விலகிவிட்டார் என்கிற தகவல் சில நாட்களாகப் பரவி வந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக
விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படத்துக்குப் பிறகு பாலா இயக்கும் அடுத்த படம் என்ன என்பது பற்றி இதுவரை எவ்வித அறிவிப்பும் வரவில்லை. அடுத்து அவர் உதயநிதியை வைத்துப் படம் இயக்கவிருக்கிறார் என்றும் உதயநிதி மற்றும் அதர்வா ஆகிய இருவரையும் நாயகர்களாக வைத்துப் படம் எடுக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், உதயநிதி, அதர்வா, ஜீ.வி.பிரகாஷ் ஆகிய
விஜய்யின் 65 ஆவது படத்தின் இயக்குநர் நெல்சன். இவர் 2010 ஆம் ஆண்டில் சிம்புவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தொடங்கினார். அப்படம் நடக்கவில்லை. அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றது. அதனால், இரண்டாவது படத்திலேயே சிவகார்த்திகேயனை இயக்கும் வாய்ப்பு அவருக்குக்
எங்கேயும் எப்போதும் பட புகழ் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ராங்கி. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை வெளியிடும் வேலைகள் தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக அப்படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடல் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். சி.சத்யா இசையில் கபிலன் எழுதியிருக்கும் அந்தப்பாடலை சின்மயி பாடியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் அண்ணாத்த. ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி
சுமார் முன்னூறு பேர் மட்டுமே வசிக்கும் ஒரு கிராமம். கருப்பங்காட்டு வலசு. அக்கிராமத்தில் திடீரென ஒரே நாளில் நான்கு மர்ம மரணங்கள் நடக்கின்றன. அவை எப்படி நடந்தன? அவற்றைச் செய்தது யார்? என்பதை விசாரித்துத் தெரிவதே படம். பச்சைக்கிளி வாத்தியார், மல்லி,காந்திமதி, நொண்டி கருப்பன், புகைவண்டி வேலன், இரட்டைமலை உள்ளிட்ட சிலரை மையப்படுத்தி கிராம வாழ்வியலைச் சொல்ல வந்திருக்கிறார்





















