செய்திக் குறிப்புகள்

சசிகுமார் வாணிபோஜன் இணையும் புதியபடம்

கூர்கா படத்தைத் தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது நடிகர்சசிகுமார் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கின்றது

“பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.

கதையின் நாயகனாக சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு இசை – ஜிப்ரான்,ஒளிப்பதிவு – கார்த்திக் கே தில்லை,படத்தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன்,
கலை – விஜய் தென்னரசு,நடனம் – தீனா,சண்டைப்பயற்சி – ஆக்‌ஷன் நூர்

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூசையுடன் தொடங்கியது.

Related Posts