விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தில் விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (15.05.2023) நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை வரலக்ஷ்மி பேசியதாவது, “உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் தயாள் அவர்கள்
சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகவிருக்கும் அந்தப்படத்தில், நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது பொன்னியின் செல்வன் முதல்பாகம். அப்படம் இதுவரை தமிழ்த்திரைப்படங்கள் தமிழ்நாடு திரையரங்குகளில் வசூலித்த தொகைகளைப் புறந்தள்ளி முதலிடம் பிடித்தது. ஒரு படம் வசூலிக்கும் மொத்தத் தொகையில் எல்லாப் பகிர்வுகளும் போக தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் தொகையை வைத்தே இந்தக் கணக்கு சொல்லப்படுகிறது. அந்த வகையில், பொன்னியின் செல்வன் முதல்பாகத்தில் சுமார்
காவல்துறையில் கான்ஸ்டபிள் என்றழைக்கப்படும் கடைநிலைக்காவலர், மாநில முதலமைச்சர் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கிய குற்றவாளியை எதேச்சையாக கைது செய்கிறார். அந்தக் குற்றவாளியைக் கொலை செய்ய காவல்துறை உயரதிகாரி ஒருவர் அலைகிறார்.அவரை மீறி குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த காவலர் முனைகிறார். அந்த ஓட்டத்துக்கு நடுவே காவலரின் காதலியும் வீட்டைவிட்டு ஓடிவந்து காவலருடன்
வறுமை நிலை என்கிற புறமும் அன்பைத் தேடும் அகமும் மதம் தாண்டிய மனிதம் சார்ந்தது என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஃபர்ஹானா பெண்களின் மடியில் பெருமைகளைச் சுமத்தியிருக்கும் மதங்கள், அவர்கள் வீட்டைத் தாண்டி வெளியே செல்லக்கூடாது என்று சொல்லியே வளர்க்கின்றன. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து அந்தக் குடும்பத்தைக் காக்க வேலைக்குப் போகும் பெண் சந்திக்கும் சிக்கல்களைக்
பெரும்பாலான குடும்பங்களில் பெரும் சிக்கலாக இருந்துகொண்டிருப்பது குறட்டை. அதனால் வரும் சிக்கல்களை நாகரிகம் கருதி பொதுவெளியில் பேசுவதில்லை. ஆனால், அதை மையப்படுத்தி ஒரு கதை எழுதி அதற்கொரு திரைக்கதை அமைத்து பொருத்தமான நடிகர் நடிகையரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்து, அய்யய்யோ குறட்டைக் கதையா? என நினைப்போரையும் சிரிக்க வைத்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் இயக்குநர் விநாயக்
சாம் என்கிற வேடத்தில் நடித்திருக்கும் அஜிதன் தவசிமுத்து எனும் சிறுவன், ராஜேஷ் என்கிற வேடத்தில் நடித்திருக்கும் கே.ஜி.விஷ்ணு ஆகிய இரண்டு சிறுவர்களை முதன்மையாக வைத்துக்கொண்டு ஒரு முழுநீளப்படம் எடுப்பது என்கிற முடிவுக்கு ஒரு விழுக்காடு வரவேற்பு கூட இருந்திருக்காது. ஆனால், இயக்குநர் சாது ஃபெர்லிங்டனின் தன்பம்பிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக அது படமாக உருவாகி பார்த்தோர்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் மே 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், அப்படம் குறித்து மதரீதியிலான சர்ச்சை உருவாக்கப்படுகிறது. இதையொட்டி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…… ஃபர்ஹானா திரைப்படம் அனைத்து இரசிகர்களுக்குமானது. மத உணர்வுகளுக்கு





















