September 30, 2026
Home Articles posted by cadmin (Page 164)
விமர்சனம்

80ஸ் பில்டப் – திரைப்பட விமர்சனம்

பெயரிலேயே 80 ஸ் பில்டப் என்று போட்டது சும்மா இல்லை.படத்தின் கதை எண்பதுகளில் நடக்கிறது. முந்தைய காலகட்டங்களைத் திரைப்படங்கள் மூலம் அடையாளப்படுத்துவது எளிது என்பதால் நாயகன் சந்தானத்தைக் கமல் இரசிகராக்கியிருக்கிறார் இயக்குநர். கவனியுங்கள் அப்போதெல்லாம் கமல்தான் முதல் அப்புறம்தான் ரஜினி.
விமர்சனம்

குய்கோ – திரைப்பட விமர்சனம்

அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் யோகிபாபுவின் அம்மா, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்ட கிராமமொன்றில் மரணிக்கிறார்.யோகிபாபு வந்துசேர ஓரிருநாட்கள் ஆகும். அதுவரை அந்த அம்மாவின் உடலை வைத்திருக்கவேண்டும். அதற்காக ஃப்ரீசர்பாக்ஸ் எனப்படும் உறைவிக்கும்பெட்டியை வாடகைக்கு எடுக்கிறார்கள்.அடுத்தநாள் சென்னையில் நடக்கும் ஐபிஎல் எனப்படும் மட்டைப்பந்துப்போட்டியைக் காணப் போகவேண்டிய விதார்த்,
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் ராஜுமுருகன் தயாரித்துள்ள படம் – விவரங்கள்

நவம்பர் 23 அன்று இயக்குநர் லோகேஷ்கனகராஜ் பராரி எனும் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டார். அரை நிர்வாணத்துடன் நாயகனும், அவர் அருகில் கிழிந்த ஆடையுடன் நாயகியும் உடல் முழுவதும் காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் உட்கார்ந்திருக்க, அவர்களைச் சுற்றி மக்கள் கூட்டம் வேடிக்கை பார்ப்பது போன்ற முதல் பார்வை கவனம் ஈர்த்திருக்கிறது. அப்படம் பற்றிய விவரம்… ராஜுமுருகனிடம் உதவி
செய்திக் குறிப்புகள்

நயன்தாராவின் அன்னபூரணி படக் கதை இதுதான் – இயக்குநர் பேட்டி

முன்னோட்டம் வந்தபோதே ஆச்சாரமான பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் அசைவ உணவு சமைப்பது போன்று காட்டுவதா எனப் பரபரப்பைக் கிளப்பிய படம் அன்னபூரணி. நயன்தாரா மற்றும் ஜெய் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய
விமர்சனம்

லாக்கர் – திரைப்பட விமர்சனம்

திருட்டு வேலைகள் செய்யும் கதாநாயகன், காதலில் விழுந்ததும்,காதலிக்குப் பிடிக்கவில்லை என்பதால் திருட்டுத் தொழிலை விட்டுவிடுகிறார். ஆனால், அதே காதலிக்காக மீண்டும் அவ்வேலையில் ஈடுபடுகிறார். அது ஏன்? எதற்காக? என்பதையெல்லாம் சொல்லும் படம்தான் லாக்கர். நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் சண்முகத்துக்கு இது முதல்படம். ஆனால் அது தெரியாத வண்ணம் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள்
விமர்சனம்

சில நொடிகளில் – திரைப்பட விமர்சனம்

இலண்டனில் வசிக்கும் மருத்துவர் ரிச்சர்ட்ரிஷி. அன்பான மனைவி புன்னகைப்பூ கீதா. கிளி போல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் துணைவி தேடும் ஆண்கள் வரிசையில் சேரும் ரிச்சர்ட்ரிஷி, மேலும் அழகான கிளியாக இருக்கும் யாஷிகா ஆனந்த்திடம் அடைக்கலம் ஆகிறார். திடீரென யாஷிகாஆனந்த் மரணிக்கிறார். அதனால் பதட்டமடைந்து அந்த மரணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்ரிஷி. ஆனால் அவர் நினைப்புக்கு மாறாக நடக்கிறது.
விமர்சனம்

ஜோ – திரைப்பட விமர்சனம்

காதல் போயின் சாதல் என்றார் பாரதி, ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன்ராம் காதல் போயின் இன்னொரு காதல் என்று சொல்லியிருக்கிறார். கேட்கும்போது எளிதாகத் தெரியும் அல்லது மலிவாகத் தெரியும் ஆனால் பார்க்கும்போது நியாயமாகத் தெரியும் வண்ணம் படமாக்கியிருக்கிறார். நாயகன் ரியோராஜ் கல்லூரியில் சகமாணவி மாளவிகாமனோஜை காதலிக்கிறார்.அவரும் சம்மதிக்கிறார். வழக்கப்படி அந்தக் காதலுக்கு எதிர்ப்பு.
செய்திக் குறிப்புகள்

முகநூல் விபரீதம் சொல்லும் படம் – விவரங்கள்

இன்றைய இளைஞர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களது வாழ்க்கைப் பாதை எவ்வாறு மாறுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கும் திரைப்படம் எங்க வீட்ல பார்ட்டி. ஐந்து இளைஞர்கள், இரண்டு பெண்கள் முகநூல் மூலமாகப் பழக்கமாகி ஓரிடத்தில் சந்தித்து பார்ட்டி கொண்டாடுகிறார்கள். அதில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளை யார் கொலை செய்தது? கொலை செய்யக் காரணம் என்ன? என்பதைக்
செய்திக் குறிப்புகள்

குய்கோ இயக்குநர் வெற்றிபெறணும் – விதார்த் வேண்டுதல்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன்,குய்கோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.குய்கோ எனும் தலைப்பு, ‘குடியிருந்த கோயில்’ என்பதன் சுருக்கமாகும். இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துக்குமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர்
செய்திக் குறிப்புகள்

விஜயகாந்த்தை நினைவுபடுத்தும் சூரகன் பட நாயகன்

தேர்ட் ஐ சினி கிரியேசன்ஸ் (3rd Eye Cine Creations) சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. இப்படத்தில், வி.கார்த்திகேயன், சுபிக்‌ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி,