மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு – பொங்கலுக்கு வருமா?
நடிகர் அஜீத் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கு முன்னதாக அஜீத் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.அதேநேரம்,அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.
விடாமுயற்சி படம் 2025 சனவரி மாதம் பொ்ங்கலையொட்டி வெளியாகும் என்றும்,அதே பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் குட்பேட்அக்லி 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் விடாமுயற்சி இயக்குநர் மகிழ்திருமேனி, இன்னும் பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே படப்பிடிப்பு முடிவடைந்திருந்தாலும் பேட்ச் ஒர்க் எனச்சொல்லப்படும் விடுபட்ட காட்சிகளை ஓரிரு நாட்கள் படமாக்க வேண்டும் என்று சொல்லியிருந்தாராம்.இப்போது பத்து முதல் பதினைந்து நாட்கள் என்று சொன்னதால் அனைவருக்கும் அதிர்ச்சி.
ஆனாலும் அவர் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொண்டு படப்பிடிப்புக்குத் திட்டமிடலாம் என்றால், அஜீத் ஸ்பெயினில் குட்பேட்அக்லி படப்பிடிப்பில் இருக்கிறார்.திரிஷாவும் அப்படப்பிடிப்பு மற்றும் தக் லைஃப் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு என இடைவெளி இல்லாமல் இருக்கிறார்.இவற்றால் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது அதற்கு ஒரு தீர்வு கண்டுவிட்டார்கள்.
அஜீத்தும் த்ரிஷாவும் ஸ்பெயினில் இருப்பதால் விடாமுயற்சி படக்குழு மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் ஸ்பெயின் செல்வது என்றும் அங்கேயே எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிடுவது என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்கு அஜீத்தும் சம்மதம் சொல்லிவிட்டாராம்.
அதனால் தீபாவளி முடிந்த பின்பு மகிழ்திருமேனி உள்ளிட்ட விடாமுயற்சி படக்குழு ஸ்பெயின் செல்லவிருக்கிறது.அங்கு விடாமுயற்சியின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
விடாமுயற்சி படம் 2025 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிற நேரத்தில் இப்படி மீண்டும் படப்பிடிப்புக்காகக் கிளம்புகிறார்கள் என்றதும் பொங்கலுக்கு வந்துவிடுமா? என்கிற ஐயம் அனைவருக்கும் வந்துவிட்டது.
இது குறித்துக் கேட்டால்,ஏற்கெனவே படம் முழுமையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.இப்போது படமாக்கும் காட்சிகளைத் தேவைப்படுகிற இடத்தில் இணைத்துவிட்டால் போதும்.அவை ஓரிரு நாட்களில் முடிந்துவிடக்கூடிய வேலை.எனவே 2025 பொங்கல் வெளியீடு என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.நிச்சயம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத் தரப்பில் சொல்கிறார்கள்.
மகிழ்திருமேனி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைக்கவேண்டும்.