நயன்தாரா மருத்துவமனைக்குச் சென்றது ஏன்? – அதிர வைக்கும் கேள்வி
சில நாட்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக ஒரு செய்தி மிக வேகமாகப் பரவியது.
அச்செய்திக்கு விக்னேஷ் சிவன் ட்விட்டரில் மிகவும் கோபத்துடன் பதிவிட்டார்.அதில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் குழந்தைகள் போன்ற தோற்றத்தில் நடனமாடுவது போன்ற ஒரு காணொலியைப் பதிவிட்டிருந்தார்.
அதோடு, எங்களைப் பற்றிய செய்திகளை நாங்கள் இப்படித்தான் பார்ப்போம். கொரோனா வைரஸ் மற்றும் நாங்கள் இறந்து விட்டது போல புகைப்படங்கள் டிசைன் செய்த உங்களையும் அப்படித்தான் பார்க்கிறோம்.
நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம். மகிழ்ச்சியாக ஆரோக்கியத்துடனும் இருக்கிறோம். உங்களைப் போன்ற ஜோக்கர்களின் கற்பனை மற்றும் முட்டாள் தனமான ஜோக்குகளை பார்க்க கடவுள் எங்களுக்கு போதுமான வலிமை மற்றும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார்
இவ்வாறு விக்னேஷ் சிவன் குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரம், நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது உண்மைதான்.அதற்காக மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை செய்ய முயன்றார்களாம்.
ஆனால் மருத்துவர்களோ நீங்கள் கண்டிப்பாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தியதன் பேரில் ஒரு மருத்துவமனைக்குச் சென்று சில நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள் என்று சொல்லப்படுகிறது.
கொரோனா என்கிற செய்திக்கு மிகக் கடுமையாக மறுப்பு கொடுத்திருந்தார் விக்னேஷ்சிவன். அப்படியானால் மருத்துவமனைக்குச் சென்றது எதற்காக? என்கிற கேள்வியை செய்தியறிந்தவர்கள் எழுப்புகிறார்கள்.











