பிரபல நடிகரின் தயாரிப்பில் நடிக்க இருக்கும் விஜய் ?
கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய்.
முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்துவருகிறது. கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வில்லனாக விஜய்சேதுபதி, நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்கள். தளபதி 64 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது.
விஜய் 65வது படம் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. பல இயக்குநர்களின் பெயர்கள் இணையத்தில் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
நடிகர் பிரபுவின் நீண்ட நாள் விருப்பம், விஜய்க்கு ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும்
என்பது. அந்த விருப்பம் இப்பொழுது நிறைவேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் பிரபுவின் சிவாஜி புரொடக்ஷனுக்கு ஒரு படம் நடிக்க விஜய் சம்மதித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அது விஜய் 65வது படமாக கூட இருக்கலாம், அல்லது அதற்கு அடுத்த படமாக கூட இருக்கலாம். ஆனால், பிரபு தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பது மட்டும் உறுதியான தகவல்.











