சினிமா செய்திகள்

இளையராஜா விவகாரம் – களமிறங்கிய பாரதிராஜா

இளையராஜா கடந்த கால் நூற்றாண்டுக்கு  மேலாக சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசைப்பணிகளை மேற்கொண்டுவந்தார்.

கடந்த மூன்று மாதங்களாக வரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வைத்திருக்கிறது அந்நிர்வாகம்.

எதனால் அப்படி? என்பதற்கான விளக்கம் முழுமையாகச் சொல்லப்படவில்லை.

இந்நிலையில், இளையராஜாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கிறார் பாரதிராஜா.

அவர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை

பாசத்துக்குரிய படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களே….

வணக்கம்…

அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் “இசைஞானி திரு.இளையராஜா” அவர்களுக்கும்,பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் திரு.இளையராஜா அவர்களின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். ஆகையால் மீண்டும் இசைப்பணிகளை அங்கு தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் 28.11.2019
(வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்
பாரதிராஜா
(23-11-2019)

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Posts