சினிமா செய்திகள்

நூறு கோடியை நிராகரித்த விஜய் அஜீத் – தமிழ் தயாரிப்பாளர்கள் பெருமிதம்

விஜய் இப்போது ஏ,ஜி,எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து சூப்பர்குட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அஜீத் இப்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரீப்பில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த படமும் போனிகபூர் தயாரிப்பிலேயே நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பெரிய நிறுவனம், விஜய், அஜீத் ஆகியோர் கேட்கிற சம்பளத்தைக் கொடுத்து, தொடர்ந்து நான்கு படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்.

நான்கு பட சம்பளத்தில் இரண்டு படங்களுக்கான சம்பளத்தை முன்பணமாகத் தருகிறோம் என்று சொல்லுங்கள் எனச்சொல்லி தம் நிறுவன அதிகாரிகளை அனுப்பினார்களாம்.

ஆனால் அவர்கள் இதற்காகத்தான் வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட விஜய் அஜீத் ஆகிய இருவருமே அவர்களைச் சந்திக்கக் கூட மறுத்துவிட்டார்களாம்.

விஜய் அஜீத் ஆகிய இருவருமே சம்பளம் அதற்கான வரி, படப்பிடிப்பில் தேவைப்படும் வசதிகள் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து படத்துக்கு ஐம்பது கோடி வரை வாங்குகிறார்கள்.

இரண்டு படங்கள் என்றால் நூறு கோடி. ஆனால் அந்தத் தொகையைப் பெரிதாக எண்ணாமல் முழுமையாக நிராகரித்துவிட்டார்கள் என்று பெருமைப்படுகிறது தமிழ்த்திரையுலகம்.

Related Posts