சினிமா செய்திகள்

பிகில் குறித்து முரண்பட்ட செய்திகள் – ரசிகர்கள் குழப்பம்

விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான இந்தப்படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

படம் வெளியான வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் என்றும் அதனால் படத்துக்கு நல்ல வசூலும் கிடைத்தது என்று சொல்லப்பட்டது.

பிகில் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஏழுநாட்கள்.இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான தேவி பாரடைஸில் போதுமான கூட்டம் இல்லாததால் பிகில் திரைப்படத்தின் மதியக் காட்சி இரத்து செய்யப்பட்டுள்ளது. படம் பார்க்க முன்பதிவு செய்திருந்தவர்கள் தேவி திரையரங்குக்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்து திரையரங்க நிர்வாகியிடம் கேட்ட போது, தேவி சினிமாஸில் மொத்தம் 4 திரையரங்குகள் உள்ளன. அதில் 2-ல் பிகில் திரையிடப்பட்டுள்ளது. இரண்டு திரையரங்குகளுக்கான கூட்டம் வராததால் ஒன்றில் மட்டும் பிகில் திரையிடப்படுகிறது. இது பிகில் படத்துக்கு மட்டும் அல்ல மற்ற படங்களும் இப்படித் தான் திரையிடப்படுகிறது என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இன்னொரு பக்கம்,பிகில் படம் தமிழக வசூலில் ரூ.90 கோடியைத் தாண்டியுள்ளது ‘பிகில்’. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் செய்தி வருகிறது.

ஒன்றுக்கொன்று முரண்பட்ட இவ்விரு செய்திகளும் அடுத்தடுத்து வெளியானதால் இவற்றில் எதை நம்புவது? என்று ரசிகர்கள் குழம்பிப்போயிருக்கின்றனர்.

Related Posts