சினிமா செய்திகள்

சூர்யா ஜோடியாக பூஜாஹெக்டே – புதியபட விவரங்கள்

சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறது.

ஆம், வணங்கான் படம் முடிவடைந்ததும் சிறுத்தைசிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறாராம் சூர்யா.

தொடக்கத்தில் அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. இப்போது தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

செப்டம்பர் மாதத்தின் மத்தியப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதற்கேற்ப இப்படத்தின் படப்பிடிப்புக்கு முன்பான வேலைகள் வேகம் பிடித்திருக்கின்றன.

முதல்கட்டமாக, அப்படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். தெலுங்கு மற்றும் இந்தியில் புகழ்பெற்றிருக்கும் அவர் நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருப்பதால் இந்தப்படமும் ஐந்து மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts