சூர்யா படத்தில் நடித்ததால் ஆர்யாவுக்குக் கிடைத்த பரிசு
ஆர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூரியா மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிக்கும் காப்பான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆர்யாவின் மனைவியாகப் போகிற சாயிஷாதான் இந்தப்படத்தின் நாயகி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது.
இந்தப்படத்தைத் தொடர்ந்து,குட்டிப்புலி,கொம்பன்,மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களின் இயக்குநர் முத்தையா. இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் ஆர்யா.
இந்தப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.
காப்பான் படத்தில் நடிக்க கடைசி நேரத்தில் ஆர்யா ஒப்புக்கொண்டதன் நன்றிக்கடனாகவும் ஆர்யா சாயிஷாவின் திருமணப் பரிசாகவும் இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது என்கிறார்கள்.











