சினிமா செய்திகள்

விஜய் 65 படத்துக்கு இதுதான் பெயரா? நல்லாவே இல்லை – இரசிகர்கள் வருத்தம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படம் குறித்த அறிவிப்பு 2020 டிசம்பர் 10 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

அதன்பின், விஜய் 65 படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.

அடுத்து சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக சென்னையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறதாம்.

இந்நிலையில், நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு அப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியானது.

அதன்படி, அந்தப்படத்துக்கு பீஸ்ட் எனும் ஆங்கிலப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.விலங்கு எனப்பொருள்படும் ஆங்கிலப்பெயர் வைத்தது மட்டுமின்றி ஆங்கிலத்திலேயே அதை வெளியிட்டும் இருக்கிறார்கள்.

இதற்கு திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். அதேவேளையில், விஜய் படத்துக்கு இப்படி ஒரு பெயரா? இது நல்லாவே இல்லை? என்று அவருடைய இரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

Related Posts