சினிமா செய்திகள்

வலிமை 30 கோடி நட்டம் – அஜீத் எடுத்த அதிரடி முடிவு

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தை நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப்படம், கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை ஆகியனவற்றால் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.

இதனால், இந்தப்படத்தின் செலவு குறிப்பாக இந்தப்படத்துக்காக வாங்கிய தொகைக்கான வட்டி பன்மடங்கு அதிகரித்துவிட்டதென தயாரிப்பாளர் வருத்தப்பட்டாராம்.

படத்தை வெளியிட்டு அது வெற்றி என்றாலும் கூட சுமார் முப்பது கோடி நட்டம் ஏற்படும் என்று தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

அண்மையில், இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் அஜீத்திடம் இதுபற்றி விளக்கமாகக் கூறப்பட்டதாம்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அஜீத், இதற்கு என்ன செய்யலாம்? எனக்கேட்டிருக்கிறார்.

அதற்கு, நீங்கள் இன்னொரு படம் நடித்துக்கொடுத்தால் சமாளித்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

அதை அஜீத்தும் ஏற்றுக்கொண்டாராம்.

அதன்படி, அடுத்தபடமும் போனிகபூர் தயாரிப்பிலேயே நடிகரகவிருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி அந்தப்படத்தையும் எச்.வினோத்தே இயக்குவார் என்றும் முடிவாகியிருக்கிறதாம்.

முப்பது அல்லது நாற்பது நாட்களுக்குள் படத்தை முடிக்கவும் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்துக்கான திரைக்கதை எழுதும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

Related Posts