சினிமா செய்திகள்

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடி இவர்தான்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படம் ஏப்ரல் 27 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் யார்? காலாவின் மனைவியாக செல்வி என்கிற கதாபாத்திரத்தில் ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார்.

இது ரொம்ப எமோஷனலான கதாபாத்திரம். நிச்சயம் பேசப்படும். ஏன்னா அந்தச் செல்வியை எல்லா வீடுகளிலும் பொருத்திப் பார்த்துக்கலாம். சகிப்புத்தன்மையுடன் ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்ற, கணவனையும், நான்கு மகன்களையும் மருமகள்களையும், பேரப்பிள்ளைகளையும் கட்டி மேய்க்கிற ஒரு பெண்மணி என்கிறார் இயக்குநர் பா,ரஞ்சித்.

அதோடு காலா வில் வில்லனாக நானாபடேகரும் காலாவுக்கு நண்பனாக வாலியப்பன்ங்கிற வேடத்தில் சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் குறுமுன்னோட்டம் நாளை (மார்ச் 2,2018) வெளியிடப்படவிருக்கிறது.

Related Posts