சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் நேரடி தெலுங்குப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தனுஷ் இப்போது ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன், மித்ரன் ஜவகர், ராம்குமார் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் புதியபடம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்விவரம்….

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை வாய்ந்தவர்.

தற்போது தெலுங்குத் திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடித் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும்.

இப்படத்தை நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக (தயாரிப்பு எண் 4 ) மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது.

மறைந்த திருமதி.சுனிதா நாரங்கின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்ட திரைப்படத்தை சோனாலி நாரங் வழங்குகிறார்.

இதர தொழில்நுட்ப மற்றும் கதாபாத்திர தேர்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Posts