மீண்டும் தள்ளிப் போகிறது டாக்டர் பட வெளியீடு
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.பல மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. மார்ச் 26 ஆம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
ஆனால்,மார்ச் 9 ஆம் தேதி, படத்தை வெளியிடும் கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்……
மார்ச் 26 ஆம் தேதி படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். படம் தொடர்புடைய அத்தனை தரப்பின் நலனையும், குறிப்பாக ரசிகர்களையும் மனதில் வைத்து இம்முடிவை எடுத்துள்ளோம்.
புதிய தேதியை இன்னும் சில நாட்களில் அறிவிப்போம். ‘டாக்டர்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே கொடுத்து வந்த ஆதரவை, ஊக்கத்தை அப்படியே வைத்திருங்கள். இந்தக் காத்திருப்புக்கு மதிப்புடைய படமாக ‘டாக்டர்’ இருக்கும்”.
இவ்வாறு கே.ஜே.ஆர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதன்பின் மார்ச் 11 ஆம் தேதியே ரம்ஜான் நாளில் டாக்டர் படம் திரைக்கு வரும் என்று அறிவித்தனர்.அதன்ப்டி மே 13 ஆம் தேதி இப்படம் வெளீயாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது அந்தத் தேதியிலிருந்தும் பட வெளீயீடு தள்ளிப்போகிறதாம்.
கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே இருக்கைகளை நிரப்ப வேண்டும் என்கிற உத்தரவு இருப்பதால் இப்படத்தின் வசூலை அது பாதிக்கும் என்பதால் மீண்டும் வெளீயீட்டைத் தள்ளிப்போட முடிவு செய்திருக்கிறார்களாம்.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்.









