Uncategorized

காசு மேல காசு – திரைப்பட விமர்சனம்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மயில்சாமி எளிதில் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக அவர் செய்யும் வேலை என்ன தெரியுமா?

பணக்கார வீட்டுப்பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து தனது மகனை காதலிக்கச்சொல்கிறார்.

மயில்சாமியின் மகனாக வரும் நாயகன் ஷாருக்கும் ஒரு பெரிய பங்களாவில் இருக்கும் நாயகி காயத்ரி ரீமாவைக் காதலிக்கிறார்.

அந்தக் காதல் என்னவானது? மயில்சாமி விரும்பியது நடந்ததா? என்பதைச் சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ஷாரூக்,காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் தேர்ந்த நடிகர் போல் தெரிகிறார். நாயகி காயத்ரி ரெமா பக்கத்து வீட்டுப் பெண் போல இருப்பது கதைக்குப்பொருத்தமாக இருக்கிறது.

படத்தின் பெரும்பலம் மயில்சாமி.அலட்டிக் கொள்ளாத உடல்மொழியுடன் அவர் போடும் திட்டங்கள் வாய் விட்டுச் சிரிக்க வைக்கின்றன. அவர் அளவுக்கு பிச்சைக்காரராக நடித்திருப்பவருக்குக் காட்சிகள் இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு சுவாரசியமான பதில் இருக்கிறது. கஞ்சா கருப்பு, நளினி, கோவை சரளா, மதுமிதா ஆகியோர் வேடங்களும் நன்று.

பல நகைச்சுவைப் படங்களுக்கு வசனம் எழுதிய கே.எஸ். பழனி எழுதி இயக்கியிருக்கிறார். உழைப்பே உண்மையான வெற்றி என்கிற கருத்தை நகைச்சுவை கலந்து நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

Related Posts