சிம்புவுக்கும் சூர்யாவுக்கும் ஆகாது என்று யார் சொன்னது?
இந்தியில் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற ‘துமாரி சுலு’ படம் காற்றின் மொழி என்கிற பெயரில் தமிழில் தயாராகிறது.
இந்தியில் வித்யாபாலன் நடித்த ரேடியோ ஜாக்கி வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். திருமணமான பெண் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்துக் கொண்டே குடும்பத்தையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தில்,ஜோதிகா கணவராக விதார்த் நடிக்கிறார். இளங்கோ குமரவேல், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சாண்ட்ரா எமிஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார்
பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு,ஜூன் மாதம் 4-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகராகவே அவர் நடித்துள்ளார் என்பது சிறப்பு. ரேடியோ ஜாக்கியான சிம்புவிடம், ஜோதிகா கேள்வி இன்டர்வியூ செய்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்தியில் ஆயுஷ்மான் குரானா இந்த வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்மதன், சரவணா ஆகிய படங்களைத் தொடர்ந்து செக்கச் சிவந்த வானம் படத்திலு சிம்புவும் ஜோதிகாவும் நடித்திருக்கின்றனர்.இப்போது இந்தப்படத்திலும் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர்.
ஆனாலும் சிம்புவுக்கும் சூர்யாவுக்கும் ஆகாது, இருருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்கிற ஒரு செய்தி காற்று வாக்கில் கசிந்துகொண்டே இருக்கும். அதைப் பொய்யாக்கும் வகையில் சூர்யா, ஜோதிகா, சிம்பு ஆகிய மூவரும் இணைந்து எடுத்த சுயமி (செல்பி) வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.











