மணிரத்னத்தின் சாதிய வன்மம் – முட்டுக் கொடுத்திருக்கும் சூர்யா விஜய்சேதுபதி
கொரோனா பேரிடர், மாபெரும் வெள்ளித்திரையை,”வெப் சீரீஸ்” எனும் சிலந்திக்கு பலியாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.
“தி ஃபேமிலிமேன் 2” மற்றும் “மேதகு” வெப் சீரீஸ்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள் சற்று ஓய்ந்த நிலையில், “நவரசா” என்றபெயரில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் மணிரத்னம் தயாரித்துள்ள 9 தொடர்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கி உள்ள சம்மர் ஆஃப் 92 சாதியத்தை அப்பட்டமாக உயர்த்திப்பிடித்துள்ளது.
“பாக்குறதுக்கு பன்னி மாதிரி இருப்பான். ஆனா, அவன் நாய்தான்” என்று “பாலியல் பள்ளி பத்மா சேஷாத்ரி புகழ்” நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும் வசனம் ஒடுக்கப்பட்ட மக்களை அப்பட்டமாக வம்புக்கு இழுத்திருக்கிறது.
படிப்பே வராத முட்டாள் மாணவனாக யோகிபாபு இதில் நடித்துள்ளார். பல அவமானங்களைச் சந்தித்து தன் கடும் உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள யோகி பாபு, ஏன் பணத்துக்காக இப்படி ஒரு கேவலமான படைப்பில் நடித்துள்ளார் என்று தெரியவில்லை.
தன்னை ஒரு பகுத்தறிவாளர் என்று பல நேர்காணல்களில் பெருமை பேசும் மணிரத்னம், எப்படி இந்த சாதி வன்மத்தைத் தூண்டும் படைப்பைத் தயாரித்தார்?
தன் திரைப்படங்களில் ஒரே ஒரு காட்சியிலாவது தன் பார்ப்பன முத்திரையை பதிவு செய்துவிடுவார் மணிரத்னம். அவர் மறந்தாலும் சுகாசின், ஒரு “அவாள்” வசனத்தை எழுதத்தவறியதில்லை.
தற்போது அகன்ற திரையில் தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்ள முடியாத அம்பிகள், வெப் சீரியஸ் மூலம் தங்கள் விஷத்தை கக்கத்தொடங்கி விட்டனர்.
ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனை, ஆசிரியரே “நாய்” “பன்னி” என்று இழிவுப்படுத்துகிறார். அவர் வீட்டு நாயை விரட்ட, அந்த மாணவனையே தேர்வில் வெற்றி பெற செய்ய சம்மதிக்கிறார்.
தவறு செய்தது பார்ப்பன ஆசிரியர்கள். ஆனால், நடினாக உயர்ந்து தன் பள்ளி விழாவில் கலந்துகொள்ளும் யோகிபாபு, தன் ஆசிரியர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.
இதற்குப் பெயர்தான் பார்ப்பன திமிர்.
தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் பார்ப்பனர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை இயக்குநர் பிரியதர்ஷன் பதிவு செய்துள்ளார் என்று நீங்கள் பாராட்டலாம். ஆனால், நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை இது என்று அவர் சொல்ல வருகிறார்.
சாதி மதம் ஏழை பணக்காரன் என அனைத்தையும் கொரோனா வென்றாலும், அவாள் ஆத்து மணிரத்னங்கள் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன்கள் திருந்துவதாக இல்லை.
“பாலியல் பள்ளி” பத்மா சேஷாத்ரி சம்பவத்தை மறந்ததுபோல், நவரசா என்ற பெயரில் மணிரத்னம் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் மாமாக்கள் செய்துள்ள சாதிய இழிவுகளையும் நாம் எளிதில் கடந்து விடுவோம்.
இந்த சாதிய வன்ம மணிரத்னத்துக்கு, மேடையில் சாதியை எதிர்த்துப் பேசும் நடிகர் சூர்யா மற்றும் விஜய்சேதுபதி முட்டுக்கொடுத்திருப்பதுதான் நவரச நகைச்சுவையின் உச்சம்.
ஈழ உணர்வைச் சீண்டிப்பார்த்த வெப் சீரீஸ், தற்போது சாதிய உணர்வைச் சீண்டத்தொடங்கி உள்ளது.
“மேதகு” எனும் சிறந்தப் படைப்பை ஒழிக்க, இயக்குநர் கிட்டு மீதான வன்மத்தை கையில் எடுத்தக் கூட்டம், நவரசாவில் சாதிய வன்மத்தைத் தூண்டும் மணிரத்னம் மாமா பற்றி வாயே திறக்காது. காரணம், மணிரத்னம் மாமா தரும் சின்னச்சின்ன வேஷங்களில் நடிப்பதும், எழுதுவதும் நம்மவர்களுக்கு பிறவிப்பயன் பெறுவதற்கு சமம்.
– தாகம் செங்குட்டுவன்











