சினிமா செய்திகள்

நடிகர் சங்கப் போராட்டத்தில் சிவகார்த்திகேயன்

மார்ச் 31 மாலை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி
துணைத் தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள், உதயா,விக்னேஷ், பிரேம்,பிரகாஷ், குட்டிபத்மினி நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொன்வண்ணன், காவிரி மேலாண்மை
ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக அழுத்தம் தரும் வகையில் விரைவில் அதற்கென ஒரு போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ அடுத்த வாரத்தில் அரசாங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி நடத்தப்படும் என்றார்.

அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டத்துக்கு, விஜய் முதல் ஆளாக வந்து கலந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வந்தார்.

மேலும்,நடிகர்கள் சிவகுமார்,பிரசாந்த்,விவேக்,பார்த்திபன் மற்றும் இயக்குநர்கள் பாண்டியராஜ், விஜய்சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Posts