சினிமா செய்திகள்

ஜாக்சன் துரை 2 படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம், ‘ஜாக்சன் துரை’. இதை பி.வி.தரணிதரன் இயக்கி இருந்தார்.நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது இந்தப்படம்.

இந்தப் படத்தின் இரண்டாம்பாகம் இப்போது உருவாகிறது.

இப் படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில், சத்யராஜ், சிபிராஜ் ஆகியோருடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

1940 களில் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடக்கிறது.இதற்காக குன்னூரில் பிரிட்டிஷ் கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களகளைக் கொண்டு அக்கால கட்டிடங்கள் போல அரங்கம் அமைத்துள்ளனர்.

அங்கு நாளை முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

சுமார் ஒரு மாதம் நடக்கவுள்ள அந்தப்படப்பிடிப்பில் முதலநாள் சத்யராஜ் பங்கேற்கிறார். சில நாட்கள் கழித்து சிபிராஜ் பங்கேற்கவுள்ளார்.

முதல்பாகம் வெற்றி என்பதால் இரண்டாம்பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்த்கது.

Related Posts