October 14, 2026
சினிமா செய்திகள்

லவ்டுடே இந்தி உரிமை எட்டுகோடி – அதன்பின் நடந்த ஆச்சரியங்கள்

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப்ரங்கநாதன் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்து வெளியான படம் லவ்டுடே.

ஏழு கோடியில் தயாரான அந்தப்படம் எழுபது கோடி வசூலித்து சாதனை படைத்தது என்பார்கள்.

அந்தப்படத்தை இந்தியில் எடுக்க விரும்பி அதன் உரிமையைக் கேட்டிருக்கிறார்கள்.

இந்தியில் இந்தக்கதையில் அமீர்கான் மகனை கதாநாயகனாக நடிக்க வைக்கத் திட்டமிடுகிறார்கள் என்பதை அறிந்த ஏஜிஎஸ் நிறுவனம், இந்தியிலும் நாங்களே தயாரிக்கிறோம் என்று சொன்னதாம்.

அதை ஏற்றுக்கொள்ளாமல் உரிமைக்கான் தொகையைச் சொல்லுங்கள் என்று கேட்க இவர்கள் பத்துகோடி என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதன்பின் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் எட்டுகோடி என்று முடிவானதாம்.

இதற்குப் பிறகு நடந்தவை வியப்பூட்டும் நிகழ்வுகள்.

எட்டு கோடியில் சரிபாதி நான்கு கோடியை இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்குக் கொடுத்துவிட்டதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.

அந்நிறுவனத்தின் இந்த நற்செயலுக்கு உடனே ஒரு நற்பலன் கிடைத்திருக்கிறதாம்.

இந்தி உரிமைக்கு எட்டுகோடி கொடுத்துவிட்டாலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் விருப்பத்தை உணர்ந்து இந்தியில் படம் தயாரானபின் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பெயரையும் படத்தில் குறிப்பிடுங்கள் என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறாம் அமீர்கான்.

திரையுலகில் நல்ல உள்ளங்களும் இருக்கின்றன என்பதற்கு இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றன.

Related Posts