October 14, 2026
சினிமா செய்திகள்

மாவீரன் வெளியீட்டுத்தேதி முடிவானது

சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார்.

இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அப்போதே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்றும் சொன்னார்கள்.

ஆனால் நினைத்தபடி படப்பிடிப்பு நிறைவடையவில்லை. அறுபதிலிருந்து எழுபது நாட்களில் படப்பிடிப்பு நிறைவடையும் என்று சொன்னார்கள்.

ஆனால் பல காரணங்களால் நூற்றிருபது் நாட்கள் வரை படப்பிடிப்பு நீளும் என்கிறார்கள்.

இப்போது அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.மார்ச் தொடக்கத்தில் மொத்தப்படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்கிறார்கள்.

உடனே அதற்குப் பிறகான வேலைகளும் தொடங்கப்பட்டுவிடுமாம்.

ஆகவே இப்போதே வெளியீட்டுத் தேதியையும் முடிவு செய்திருக்கிறார்கள்.

கோடைவிடுமுறையில் பொன்னியின் செல்வன் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்னறன. அவற்றிற்கடுத்து இந்தப்படத்தை ஜூன் 29 வியாழக்கிழமையன்று வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளனவாம்.

Related Posts